← முகப்புதிருச்சிராப்பள்ளி →

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணம் – முதல்வர் விஜயின் திருச்சி வருகை ரத்து!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திருச்சி வருகை ரத்து

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணம் – முதல்வர் விஜயின் திருச்சி வருகை ரத்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75), இன்று (நவம்பர் 19) சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் வி.எஸ். பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய்யின் திருச்சி பயணம் ரத்து

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முதல்வர் விஜய் நாளை (நவம்பர் 20) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.134.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 600 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கவும், காஜாமலை பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.மேலும் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல்வர் விஜய் வருகையால் திருச்சி மாநகர் பகுதியில் முதலமைச்சர் செல்லும் வழித்தடங்களான விமான நிலையம் முதல் புத்தூர் அரசு மருத்துவமனை வரையிலான சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, சாலையின் மையத்தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள், அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளம் சீரமைக்கும் பணிகள், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கட்டடத்தில் பெயர்ந்து கிடக்கும் சிமெண்ட் பூச்சுகள் புதுப்பிக்கும் பணிகள், வளாகத்தின் உள்ளே செல்லும் பாதை ஆகியவற்றில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளன. மேலும் முதல்வர் ரோடு ஷோ செல்லும் போது பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று அவரை வரவேற்கும் வகையில் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்றது

ஆனால், கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவையடுத்து முதல்வர் விஜய்யின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !