← முகப்புதிருச்சிராப்பள்ளி →

காவிரி ஆற்றில் இறங்கி மணலில் உடலைப் புதைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

காவிரி நீரைத் திறந்துவிடாமல் கர்நாடக அரசு தாமதம் செய்வதைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றின் மணலில் தங்களைப் புதைத்துக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி ஆற்றில் இறங்கி மணலில் உடலைப் புதைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

தமிழகத்திற்கான காவிரி நீரைத் திறந்துவிடாமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர். காவிரி ஆற்றில் இறங்கிய அவர்கள், ஆற்று மணலில் தங்களது உடலைப் புதைத்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை நம்பி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை உரிய முறையில் திறந்துவிடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு முயற்சித்து வருவதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் வரத்து பாதிக்கப்படுவதுடன், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறினர்.

போராட்டத்தின்போது கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும், மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !