← முகப்பு

ஜடாயுவை படத்துல பாத்தா போதுமா? நேர்ல வந்து பாருங்க! – கேரள முதலமைச்சர் அழைப்பு!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் செய்து வரும் ராமாயணம் படத்தை வைத்து கேரள முதல்வர் சுதீசன் விடுத்துள்ள சுற்றுலா அழைப்பு வைரலாகியுள்ளது.

ஜடாயுவை படத்துல பாத்தா போதுமா? நேர்ல வந்து பாருங்க! – கேரள முதலமைச்சர் அழைப்பு!

இந்து மதத்தின் பழம்பெரும் புராணக் கதையான ராமாயணம் எத்தனையோ முறை படமாகவும், நாடகமாகவும் எடுக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படமாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வாறாக சமீபத்தில் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடித்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ’ராமாயணம் – பாகம் 1’ வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராவணனுக்கும், ஜடாயுவுக்குமான சண்டைக் காட்சிகள், அதன் பிரம்மாண்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து ஜடாயு பறவை சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இந்நிலையில் ராமாயணம் குறித்து பேசியுள்ள கேரள முதலமைச்சர் சுதீசன், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் ராமாயணம் படத்தின் மூலமாக ஜடாயு பறவை கதாப்பாத்திரம் இணையம் முழுவதும் பேசுப்பொருளாகியுள்ளது. அப்படியான ஜடாயுவின் பிரம்மாண்ட சிலை கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஜடாயு பாறையில் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் ஜடாயு பாறைக்கு பயணம் செய்து அதன் பிரம்மாண்டத்தை ரசியுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

ராமாயண இதிகாசத்தின்படி, ராவணனுடனான சண்டையில் ஒற்றை பக்க இறக்கை வெட்டப்பட்ட ஜடாயு வீழ்ந்து இறந்த பாறைதான் கொல்லத்தில் உள்ள ஜடாயு பாறை என கூறப்படுகிறது. அங்கு ஒற்றை இறக்கை இழந்த நிலையில் உள்ள ஜடாயுவிற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.