← முகப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் தவித்த நோயாளி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை எனக் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  1 மணி நேரம் ஆம்புலன்ஸில் தவித்த நோயாளி!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன் என்பவர் இருதயக் கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க உறவினர்கள் முயன்றுள்ளனர். அப்போது, போதுமான வெண்டிலேட்டர் வசதி இல்லை எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாயிலிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாகத் தெரிகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நோயாளியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் பதற்றமடைந்த உறவினர்கள், வேறு வழியின்றி அவரை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலைக்கே அழைத்துச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை எனக் கூறப்படும் இந்தச் சம்பவம், அவரது உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !