← முகப்பு

உண்மைய ஒத்துக்கோ கம்மின்ஸ்! பந்தை சேதப்படுத்தியதை ஒத்துக் கொண்ட வார்னர்!

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கடந்த 2018ம் ஆண்டில் தண்டிக்கப்பட்டது குறித்து பேட் கம்மின்ஸ் பேசியதற்கு டேவிட் வார்னர் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.

உண்மைய ஒத்துக்கோ கம்மின்ஸ்! பந்தை சேதப்படுத்தியதை ஒத்துக் கொண்ட வார்னர்!

உலகளவில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் அணிகளில் ஒன்று ஆஸ்திரேலிய அணி. அப்படியான ஆஸ்திரேலியா அணி கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், கேமரூன் ஃபேன்கிராப்ட் ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் இன்றளவும் இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்குமே ஒரு அவமானத்திற்குரிய சம்பவமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் உஸ்மான் கவாஜா எழுதிய தனது புத்தகத்தில் 2018 சம்பவம் பற்றி விவரித்தபோது பந்தை சேதப்படுத்தும் திட்டம் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் தெரிந்தே இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், இது அணியின் திட்டமில்லை என்றும், கவாஜாவை தனியாக குற்றம் சாட்டியும் பேசி வருகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் டேவிட் வார்னர் கவாஜாவுக்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்துள்ளார்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இதுபற்றி பேசிய டேவிட் வார்னர் ”இந்த விவகாரத்தில் நாங்கள் மூவரும் பெரிய விலையைக் கொடுத்துள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் பற்றி நான் வெளியே பேசவில்லை. நாங்கள் எதிர்கொண்ட தண்டனைகளை தாண்டியும் பொதுவெளியில் நாங்கள் அவமானகரமாக நடத்தப்பட்டோம். உண்மை ஏற்றுக் கொள்ளப்படும் வரை இந்த விஷயம் மிகுந்த வேதனையை தரும்” என கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு பேட் கம்மின்ஸ் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதற்கு பதிலாக, தான் கடந்த காலத்தில் செய்த தவறை ஒத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல பழக வேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுவதாக உள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.