சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி ’குழந்தைகள் தினமாக’ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாளை மறுநாள் (நவம்பர் 14) குழந்தைகள் தினத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை (நவம்பர் 13) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு புதிதாக தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு விருப்பமான கேக் வழங்கலாம் என அரசு முடிவு செய்து டெண்டர் கோரியது.
Reach our readers. Contact us to advertise in this space.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து கேக் விநியோக நடைமுறைகளை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு சுவையான கேக் வழங்கப்பட உள்ளது. அதனுடன் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவிக்கும் வாழ்த்து அட்டை ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
நாளை குழந்தைகள் தினத்தை கேக்குடன் கொண்டாட உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொள்கிறார். இதற்காக கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வரின் தொகுதியான பெரம்பூரில் உள்ள பள்ளிகளில் கொண்டாடமல், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் உள்ள பள்ளியில் முதல்வர் விஜய் குழந்தைகள் தினத்தை கொண்டாட உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






