← முகப்பு

தந்தைக்கு செய்த சத்தியம்! மைதானத்தை அலறவிட்ட சேவாக் மகன்!

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் 160 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.

Aryaveer Sehwag

இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும் வீரர்களில் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக். இவரது மகன் ஆர்யவீர் சேவாக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இளையோருக்கான யு-19 போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது ஆர்யவீர் இளையோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று இந்திய அணிக்கும், அரபு அமீரக அணிக்குமான போட்டி நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பாக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசி மொத்தம் 160 ரன்களை குவித்து அரங்கத்தை அதிரச் செய்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 309 ரன்கள் குவித்த நிலையில், அரபு அமீரக அணியை 239 ரன்களில் ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ஆர்யவீர் சேவாக் ”நான் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என விரும்பினேன். அதற்காக ஒரு நபரிடம் வாக்குக் கொடுத்திருந்தேன். அவர் வேறு யாரும் அல்ல. எனது தந்தை விரேந்திர சேவாக்தான். என் அப்பாவிற்கு பெரிய சதங்கள் பிடிக்கும். அவரது கிரிக்கெட் பாரம்பரியத்தைத் தொடரும் பொறுப்பு எனக்கு உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.