மத்திய வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல், உலகளாவிய பொருளாதார காரணிகளால் கடந்த சில காலமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அதன் தொடர் விளைவாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 97 ரூபாய் என்ற நிலையில் சரிவடைந்து வருகிறது. ரூபாய் வீழ்ச்சியை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி டெரிவேட்டிவ் பரிவர்த்தனை உச்சவரம்பை 100 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 5 மில்லியன் அமெரிக்க டாலராக அதிரடியாகக் குறைத்துள்ளது.
Reach our readers. Contact us to advertise in this space.
மேலும் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை நேரடியாக ரிசர்வ் வங்கியிடமே பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

