கடந்த 2014ம் ஆண்டு முதலாக தொடர்ந்து மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார் நரேந்திர மோடி. தான் பதவியேற்றது முதலாக பல எளிய நடைமுறைகளையும், சில கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து பின்பற்றி வருபவர் நரேந்திர மோடி. அவ்வாறாக அவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, நாட்டிற்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுடன் ராணுவ முகாம்களில் கொண்டாடி வருகிறார்.
அவ்வாறாக இந்த ஆண்டு தீபாவளியை சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் அமைந்துள்ள கோப்ரா (CoBRA) படைப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினருடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் ’தீபாவளி மிலன் சமாரோ’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்களிடையே பேசினார்.
Reach our readers. Contact us to advertise in this space.
அந்த உரையில் அவர் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினார். அதில் அவர் ”நமது நாட்டில் இளைஞர் சக்தி, திறமை, தொழில்நுட்பம் மற்றும் மலிவு விலையில் இணையத் தரவு ஆகியவை உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகிற்கு எடுத்துச் சொல்ல நம்மிடம் ஒரு அற்புதமான கதை உள்ளது—அதுதான் 'இந்தியாவின் கதை' (The India Story)... நாம் உருவாக்கும் உள்ளடக்கங்கள் இந்தியாவை உண்மையாகப் பிரதிபலிக்கின்றனவா என்று சிந்திக்க வேண்டும். நமது சாதனைகள், திறமைகள் மற்றும் நேர்மறையான மாற்றங்களுக்குப் போதுமான இடம் கிடைக்கிறதா? இந்தியாவில் இத்தகைய கதைகளுக்குப் பஞ்சமே இல்லை.
போதைப்பொருள் பயன்பாடு எனும் சிக்கல் குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது இளைஞர்களை இந்தத் தீமையிலிருந்து நாம் காக்க வேண்டும். சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு—தேசிய ஒற்றுமையை வளர்க்கும் விவகாரங்களுக்கு—ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து, அவற்றை தங்கள் விவாதங்களில் உள்ளடக்கும்போது, அது 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கிய பயணத்தை மேலும் வேகப்படுத்துகிறது” என பேசினார்.



