← முகப்பு

300 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து! 6 பேர் பலி! – உத்தரகாண்டில் அதிர்ச்சி!

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து! 6 பேர் பலி! – உத்தரகாண்டில் அதிர்ச்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 30 முதல் 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று ஹரித்வாரிலிருந்து சமோலி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள குலார் பஜார் அருகே பேருந்து அதிகாலை 4.30 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தபோது, குலார் பாலத்தில் செல்லும்போது தவறி 300 அடி பள்ளத்தில் சரிந்தது.

இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பியாசி மற்றும் தல்வாலாவில் இருந்து SDRF பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துரிதமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” உத்தராகண்டின் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். துயரத்தின் இந்த வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நேற்று ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான நிலையில் இன்றும் மற்றுமொரு விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !