இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உலகக்கோப்பை அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றது இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள். 2008ம் ஆண்டில் 8 அணிகளை கொண்டு தொடங்கிய இந்த ஐபிஎல் சீசனில் கடந்த 2022ம் ஆண்டில் லக்னோ ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டு அணி எண்ணிக்கை 10 ஆனது.
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் செல்லும் இந்த ஐபிஎல் போட்டிகளை மேலும் விருவிருப்பாக்கும் வகையில் அடுத்த 2028ம் ஆண்டில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு 12 அணிகளாக விரிவுப்படுத்த பிசிசிஐ யோசனையில் இருப்பதாக மிண்ட் தளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Reach our readers. Contact us to advertise in this space.
இதுவரை இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அப்படி 2 அணிகள் சேர்ந்தால் அதில் கண்டிப்பாக புனேவுக்கு ஒரு அணி கிடைக்கலாம் என ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. கிரிக்கெட்டை மிகவும் விரும்பும் நகரங்களில் ஒன்றான புனே, ஏற்கனவே ஐபிஎல்லில் புனே வாரியர்ஸ், புனே சூப்பர் ஜெயண்ட் என வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

