சென்னை: ‘ஒரே இரவில் கரூருக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், சிவகங்கைக்கு இன்றுவரை செல்லாதது ஏன்?’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: “இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும், வாய் கூசாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் மக்கள் அவதி யுற்றபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்துக்கு ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு, யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ,…
Author: admin
பாட்னா: பிஹாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில் இந்த ரயில் வரும்போது, டீன்ஏஜ் மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரயில்வே போலீஸார் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
துபாய்: 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன. இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று விடும். எஞ்சிய அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெறும் அடிப்படையில் தகுதி பெறும். அதன்படி, ஜிம்பாப்வே அணி, தனது கடைசி நான்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கென்யா, தான்சானியா ஆகிய அணிகளை வீழ்த்தி அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, நமீபியா அணியும் உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலுக்கான களப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து, கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில்…
புதுடெல்லி: காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன. விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்றுவதற்கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்.4) தொடங்குவதாக அறிவித்துள்ளன. அதன்படி, அக்டோபர் 4 முதல் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் இனி இந்த புதிய முறையின் கீழ் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு பணம் சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்கவும், தாமதங்கள் அல்லது நிராகரிப்பு செய்யப்படுவதை தவிர்க்கவும் காசோலையில் அனைத்து விவரங்களையும் துல்லியமாக நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி வாடிக்கையாளர்களை இந்த இரு தனியார் துறை வங்கிகளும் அறிவுறுத்தியுள்ளன. பாசிட்டிவ் பே…
ஃபோர்டே: உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியின் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ) தூக்கி 2-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளியை கைப்பற்றினார். இதே பிரிவில் வட கொரியாவின் ரி சோங்கும் முதலிடம் பிடித்து தங்கமும், தாய்லாந்தின் தான்யாத்தோன் சுக்சரோயன் 3-ம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
காமராஜரின் வாழ்க்கை கதையை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் தனது ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய, ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் திருக்குறளை மையமாக வைத்து ‘திருக்குறள்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். திருக்குறளை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், யூடியூப் தளத்தில் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப் படம் வெளிவந்த போது, நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையரங்குக்கு ஆட்கள் வரவில்லை. அதனால், மக்களிடம் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் யூடியூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்து வெளியிட்டுள்ளோம். இப்படம் உலகம் எங்கும் போய்ச் சேரும். காலம் கடந்தும் நிற்குமென நம்பிக்கை உள்ளது” என்றார். தயாரிப்பாளரும் நடிகருமான பி.எல். தேனப்பன், சித்ரா லட்சுமணன், ராம்ராஜ் குழுமத் தலைவர் கே.ஆர். நாகராஜன் உள்பட பலர் கலந்து…
தருமபுரி: ‘விஷச் சாராய உயிரிழப்புகளின் போது கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் கூற செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது கரூருக்குச் சென்றுள்ளார்’, என பாலக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏனெனில், மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுக-வும் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருவது அதிமுக தான். மக்களுக்காக செயல்படும் கட்சி அதிமுக. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட…
புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய பிரச்சினைகள் எல்லாம் தீவிரம் அடைந்து வருகின்றன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் எல்லாம் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல. வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். உள்நாட்டு வர்த்தக நிலவரம் வலுவாக…
ஒட்டாவா: கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்தொடர்ச்சியாக, திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவைப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, அந்த திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை குறிவைத்து செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில்…
