தருமபுரி: ‘விஷச் சாராய உயிரிழப்புகளின் போது கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் கூற செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது கரூருக்குச் சென்றுள்ளார்’, என பாலக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏனெனில், மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுக-வும் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருவது அதிமுக தான். மக்களுக்காக செயல்படும் கட்சி அதிமுக. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட…
Author: admin
புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய பிரச்சினைகள் எல்லாம் தீவிரம் அடைந்து வருகின்றன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் எல்லாம் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல. வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். உள்நாட்டு வர்த்தக நிலவரம் வலுவாக…
ஒட்டாவா: கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்தொடர்ச்சியாக, திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவைப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, அந்த திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை குறிவைத்து செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில்…
கரூர்: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கேள்வி எழுப்பினார். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் எம்.ஏ.பேபி மற்றும் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், சச்சிதானந்தம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, எம்எல்ஏ நாகை மாலி கொண்ட குழுவினர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், எம்.ஏ.பேபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், இரவோடு இரவாக நேரில் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இங்கு நடந்த சம்பவம்போல இனி எங்கும் நடைபெறக்கூடாது. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, கட்டுப்படுத்தவோ…
புதுடெல்லி: நாட்டில் வழக்கமாக நவராத்திரி மற்றும் பண்டிகை காலத்தில் மக்களின் நுகர்வு அதிகரிக்கும். ஆண்டு விற்பனையில் 40 முதல் 45 சதவீதம் இந்த பண்டிகை காலத்தில் மட்டுமே நடைபெறும். இந்த முறை ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதனால் கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மக்களின் நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக கார்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. நவராத்திரியின் முதல் நாளில் 30,000 கார்களை விற்ற மாருதி சுசுகி நிறுவனம், 8 நாட்களில் 1.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலத்தில் கார்களின் முன்பதிவு 2 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவராத்திரி காலத்தில் 85,000 மாருதி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை இந்தாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 வாகனங்களை விற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின்…
இதயம் மற்றும் வாஸ்குலர் ஆரோக்கியத்திற்கு வரும்போது, இரத்த நாளங்களின் வலிமை நாம் உணர்ந்ததை விட முக்கியமானது. சேதமடைந்த அல்லது கடினமான இரத்த நாளங்கள் சரியான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் உடலில் அதன் சொந்த பழுதுபார்க்கும் வழிமுறைகள் உள்ளன, மேலும் சில உணவுகள் இந்த இயற்கை குணப்படுத்துதலை தீவிரமாக ஆதரிக்க முடியும். டாக்டர் வில்லியம் லி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி ஆய்வுகள் போன்ற விஞ்ஞானிகள் அன்றாட உணவுகளை சுட்டிக்காட்டுகின்றன, அவை கப்பல்களை மிருதுவான, செயல்பாட்டு மற்றும் வலுவாக வைத்திருக்க உதவும்.அடிப்படை ஊட்டச்சத்துக்கு அப்பாற்பட்ட 5 உணவுகள் இங்கே உள்ளன மற்றும் வாஸ்குலர் அமைப்புக்கு இயற்கை குணப்படுத்துபவர்களாக செயல்படுகின்றன.
ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பிஎஸ்எப், ராஜஸ்தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்கள் ஆபரேஷன் சிந்தூரின்போது உலகத்துக்கு தெரியவந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமானது. பாகிஸ்தான் மக்களுக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அந்த நாட்டின் தீவிரவாதிகளை அழிப்பதில் ஈவு, இரக்கம் காட்ட முடியாது. ஆபரேஷன் சிந்தூரின்போது தீவிரவாத முகாம்களை மட்டுமே அழித்தோம். ஆனால் இந்தியா மீது…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என் வீட்டில் நடைபெற்ற ஒரு சிறிய சம்பவத்தை உங்களுக்கு சொல்கிறேன். என் மகள் நிதாரா வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்படி விளையாடும் போது, எதிர் தரப்பில் விளையாடும் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து குறுந்தகவல்கள் வரும். எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆணா, பெண்ணா என்று பல கேள்விகள் வரும். அப்படி கேட்ட போது, பெண் என்று என் மகள் பதில் அனுப்பினாள். உடனே எதிர் தரப்பில் விளையாடி கொண்டிருந்த அந்த நபர், ‘உங்கள் நிர்வாண படத்தை அனுப்ப முடியுமா?’ என்று என் மகளுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் மகள், உடனே வீடியோ கேமை அணைத்து விட்டு, நடந்த…
திருச்சி: திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிர்வாகிகள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு சார்பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் 6 பேர் ராமர் படம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அவமதித்ததுடன், தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும், ராமரை இழிவாகப் பேசியதுடன், ராவணனைப் போற்றும் வகையில் பேசியுள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை கண்காணித்து வரும் காவலர் கார்த்திக், இந்தப் பதிவு மக்களிடையே கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு…
பரிதாபாத்: ஹரியானாவின் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உளவு பார்க்கும் வேலையை வாசிம் அக்ரம் செய்துவந்துள்ளார். அக்ரம் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் உரையாடல்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானின் மற்றொரு உளவாளியான தவுபிக்கை கைது செய்து விசாரித்தபோது அவர் அக்ரம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போதுதான் உண்மைகள் தெரிந்தது. அக்ரம் மற்றும் தவுபிக் இருவரும் இணைய அழைப்புகள் மூலம் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
