Author: admin

சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். கோயில்​கள் சார்​பில் நடத்​தப்​படும் அர்ச்​சகர் பயிற்​சிப் பள்​ளி​களில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்​கள் உட்பட 89 மாணவர்​கள், மூன்​றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்​கள், தவில் மற்​றும் நாதஸ்வர பயிற்​சிப் பள்​ளி​யில் மூன்​றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்​கள் என 108 பேருக்கு அதற்​கான சான்​றிதழை அறநிலை​யத் துறை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு நேற்று வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 2021-ம் ஆண்​டிலிருந்து இது​வரை பயிற்​சிப் பள்​ளி​களில் பயின்ற 213 பேருக்கு சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளது. திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 43 ஓது​வார்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் பெண் ஓது​வார்​கள் மட்​டும் 12 பேர். திமுக ஆட்​சி​யில் இது​வரை 3,707 கோயில்​களுக்கு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. கோயில்​களில் உள்ள சிலைகளை…

Read More

சென்னை: மிச்​செலின் நிறு​வனம் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​திருக்​கிறது. இவை அடுத்த ஆண்​டில் விற்​பனைக்கு வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களுக்​கான டயர் விற்​பனை​யில் சிறந்து விளங்​கும் முன்​னணி நிறு​வன​மான மிச்​செலின் இந்​தியா நிறு​வனம் தற்​போது எஸ்​யு​வி, சேடன் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​து, அறி​முகம் செய்​துள்​ளது. இது தொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் இந்​திய பிரிவு தலை​வர் விட்​டோர் சில்​வா, மேலாண்மை இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்​டே,மிச்​செலின் சென்னை ஆலை இயக்​குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்​மிடிப்​பூண்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்​டுமே இருந்​தது. இன்​றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்​கப்​பட்​டிருக்​கின்​றன. 2030-ம் ஆண்​டுக்​குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்​டரை கடந்​திருக்​கும். இவை நகரங்​களுக்கு இடையே​யான தொலைவை குறைக்​கின்​றன. உதா​ரண​மாக சென்​னை​யில் இருந்து பெங்​களூருக்கு செல்​வதற்கு 7 மணி நேர​மாகும் நிலை​யில், விரை​வில் பெங்​களூரு​வுக்கு…

Read More

ஒரு அரிய வானியல் நிகழ்வில், விண்மீன் பார்வையாளரான காமட் 3i/அட்லஸ் 2025 ஆம் ஆண்டில் எங்கள் சூரிய குடும்பத்தை கடந்து செல்கிறது. 130,000 மைல் வேகத்தில் (219,000 கிமீ/மணி) வியக்க வைக்கும் வேகத்தில் பயணிக்கிறது, இந்த வால்மீன் நமது சூரியனுக்கு அப்பால் இருந்து உருவாகிறது, இது சோலார் அமைப்பில் நுழைவதற்கு மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட இடைவெளியின் பொருளாக மட்டுமே அமைகிறது. அதன் கரு, 1 கிலோமீட்டருக்கும் குறைவான அகலமானது, வாயு மற்றும் தூசியின் ஒளிரும் கோமாவால் சூழப்பட்டுள்ளது, இதில் நீர் பனி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை உள்ளன. அக்டோபர் 3, 2025 அன்று, இது செவ்வாய் கிரகத்திற்கு அதன் நெருங்கிய அணுகுமுறையை உருவாக்கும், இது ஈஎஸ்ஏ மற்றும் நாசா விண்கலத்தை விரிவாகக் கவனிக்க அனுமதிக்கிறது. பின்னர், இது பெரிஹெலியனின் போது வியாழன் அருகே கடந்து செல்லும், இது நமது சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு விண்மீன் வேதியியல்,…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார். அதற்கு, செல்​போன் மூலம் ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனுக்கு பணம் அனுப்​பி​னார். அப்​போது அதே ஆட்​டோ​வில் பயணம் செய்த ஆட்டோ ஓட்​டுநரின் நண்​ப​ரான முகமது சையது சல்​மான் என்​கிற சுல்​தான், முதி​ய​வர் பணம் அனுப்​பும்​போது, ரகசிய குறி​யீட்டு எண்ணை பார்த்​துள்​ளார். பிறகு அந்த முதி​ய​வரை திசை திருப்பி செல்​போனை​யும் திருடி விட்​டார். பின்னர், முதியவரின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.1.95 லட்​சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர். இது தொடர்​பான புகாரில் ஹைத​ரா​பாத் சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனை பிடித்து விசா​ரணை நடத்​தி​ய​தில் நடந்த உண்​மை​கள் வெளிவந்​தன. முதி​ய​வரின் செல்​போன் மூலம் பெட்​ரோல் பங்க், கடைகள், என பல இடங்​களில் ஸ்கேன் செய்​து,…

Read More

சென்னை: ‘​மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். விதி மீறலால் உயி​ரிழப்​பு, பொருளா​தார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்​றுமதி குழும மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் அறி​வுறுத்தி உள்​ளார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் பிறந்​தவர் ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு. இவர் தனது இல்​லத்​தில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர்​களுக்​கான ‘கலாம் சபா’ என்ற நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நிறு​வி​யுள்​ளார். இதை விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை கடந்த ஆண்டு திறந்​து​வைத்​தார். ‘கலாம் சபா’ நூல​கம் சார்​பில் மாதாந்​திர வழி​காட்டி கூட்​டத்​தொடரை​யும் டில்​லி​பாபு நடத்தி வரு​கிறார். அதில் சிறந்த ஆளு​மை​கள் வரவழைக்​கப்​பட்​டு, அவர்​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது. அதன் 8-வது நிகழ்​வாக அக்​.1-ம் தேதி ‘ஹார்​வர்டு நாட்​கள்’ என்ற தலைப்​பில் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், தோல் ஏற்​றுமதி குழு மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் பங்​கேற்​று, அவர் எழு​திய ‘ஹார்​வர்டு நாட்​கள்’ நூலில் போக்​கு​வரத்து விதி​மீறல் குறித்து எழு​தி​யது தொடர்​பாக விஞ்​ஞானி…

Read More

மூன்று காலகட்டங்களில், 3 நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘அமரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதை திருஅருள்கிருஷ்ணன் இயக்கியுள்ளார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ளார். இதில் ராஜன் தேஜேஸ்வர், ஐராஅகர்வால் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா,நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெரேடி, வாசுதேவன் முரளி உள்படபலர் நடித்துள்ளனர். மிக்கி ஜெ.மேயர் இசையமைத்துள்ளார். பரத்குமார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படம் பற்றி திரு அருள் கிருஷ்ணன் கூறும்போது, “இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் ஆக் ஷன் விருந்தாக இந்தப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இதுவரை சொல்லப்படாத, கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் இந்தப்படம், பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

Read More

சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. செல்​லப் பிராணி​கள் வளர்ப்பை முறைப்​படுத்த கடந்த 2023-ம் ஆண்​டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக செல்​லப்​பி​ராணி உரிமம் பெறு​வது நடை​முறை​யில் உள்​ளது. செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர் தங்​களின் புகைப்​படம், முகவரிச் சான்​று, செல்​லப்​பி​ராணி புகைப்​படம் மற்​றும் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்ட சான்​றிதழ் ஆகிய​வற்றை பதிவேற்​றம் செய்து ரூ.50 உரிமக் கட்​ட​ண​மாகச் செலுத்தி உரிமம் பெற்று வரு​கின்​றனர். கடந்த 2024-ம் ஆண்​டு​முதல் இந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் வரை 12,393 உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில் நாட்டிலேயே முதன்​முறை​யாக சென்னை மாநக​ராட்​சி​யில் நாய்​களுக்கு மைக்​ரோசிப் செலுத்​துதல், உரிமம் வழங்​குதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதள சேவை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சேவையை ரிப்​பன்…

Read More

பெங்களூரு: பெங்​களூரு​வில் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து மனை​வி​யின் அந்​தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர். பெங்​களூரு​ புட்​டேனஹள்​ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீ​ஸில் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: எனக்​கும் புட்​டேனஹள்​ளியை சேர்ந்த சையத் இனா​முல் (35) என்​பவருக்​கும் கடந்த ஆண்டு டிசம்​பரில் திரு​மணம் ஆன‌து. வரதட்​சணை​யாக 340 கிராம் நகை, இரு சக்கர வாக​ன​மும் கொடுத்​தோம். பின்னர் என் கணவர் சையத் இனா​முலுக்கு ஏற்​கெனவே திரு​மண​மானது தெரிய​வந்​தது. இதுகுறித்து அவரிடம் கேட்​டபோது, என்னை தாக்​கி​னார். மேலும் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து அவர் என்​னோடு நெருக்​க​மாக இருப்​பதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். மேலும் அவருக்கு 19 பெண்​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. அவர் என்​னுடன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோவை வெளி​நாடு​களில் உள்ள நண்​பர்​களு​டன் பகிர்ந்​துள்​ளார். வெளி​நாடு​களில் இருந்து அவர்​கள் பெங்​களூரு வரும்​போது என்னை அவர்​களு​டன் பாலுறவு வைத்​துக் கொள்​ளும்​படி வலி​யுறுத்​தி​னார்.…

Read More

அகம​தா​பாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி வீரர்​கள் கே.எல்​.​ராகுல், துருவ் ஜூரல், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இதையடுத்து முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 286 ரன்​கள் முன்​னிலை​ பெற்​றுள்​ளது. 2-ம் நாள் ஆட்ட நேர முடி​வில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் குவித்​துள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் கடந்த 2-ம் தேதி தொடங்​கியது. முதலில் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில், 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜஸ்​டின் கிரீவ்ஸ் 32 ரன்​கள் எடுத்​தார். இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 4, ஜஸ்​பிரீத் பும்ரா 3, குல்​தீப் யாதவ் 2,…

Read More

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர். “இந்தப் படம், ஓர் இளைஞனுக்கும் ஓர் அற்புதமான யானைக்கும் இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பேசுகிறது. இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் மதி, கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். யானையுடன் நடிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியான காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாக இருந்தாலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார்” என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

Read More