சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு. சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை சதங்களுடன் 18,426 ரன்கள் வேட்டையாடினார். டி20ல் மட்டும் ஒரே ஒரு ஆட்டத்தில் பங்கேற்று 10 ரன்கள் சேர்த்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளும் வாங்கிய விருதுகளும் ஏராளம். ஆனால் கிரிக்கெட் வரலாற்றை கவனித்தால் சச்சின் டெண்டுல்கரை விட அதிக வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் வில்பிரெட் ரோட்ஸ், டெனிஸ் பிரையன் குளோஸ், பிராங்க் எட்வர்ட் வூலி (இங்கிலாந்து), மேற்கு இந்தியத் தீவுகளின் ஜார்ஜ்…
Author: admin
Last Updated : 06 Oct, 2025 05:48 AM Published : 06 Oct 2025 05:48 AM Last Updated : 06 Oct 2025 05:48 AM ஜபருல்லா புதுக்கோட்டை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில இணை செயலாளர் ஜபருல்லா கூறினார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜபருல்லா பேசியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் எதிர்க்கட்சி கூட்டணிதான் ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW…
வெங்காயம் ஒரு சமையலறை இன்றியமையாதது, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு அடிப்படை பருப்பு தட்கா, அல்லது விரைவான சாலட்டைத் தயாரிக்கிறாரா, ஒரு சில நறுக்கிய வெங்காயம் பொதுவாக கலவைக்கு வழியைக் காண்கிறது! நம்மில் பெரும்பாலோர் வெங்காயத்தை ஒரு சுவை அடிப்படையாகக் கருதினாலும், சுகாதார நன்மைகளின் அடிப்படையில் அது உண்மையில் என்ன வழங்குகிறது என்பதை மிகச் சிலரே உணர்கிறார்கள்.சமீபத்தில், ஊட்டச்சத்து மற்றும் உணவுத் துறையில் நன்கு அறியப்பட்ட மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் வில்லியம் லி, உழவர் சந்தையில் அவர் கண்டறிந்த ஒரு தனித்துவமான வெங்காயத்தைப் பற்றிய தனது அறிவொளி எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தோற்றம் அல்ல, ஊட்டச்சத்து, சிவப்பு வெங்காயம் என்ன செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.வண்ணம் ஒரு கதையைச் சொல்கிறதுசிவப்பு வெங்காயத்தின் ஆழமான சிவப்பு-ஊதா நிறம் “அங்கே” மட்டுமல்ல, இது ஒரு காட்சி முறையீட்டை விட அதிகம். வெங்காயத்தின் துடிப்பான நிழல் அந்தோசயினின்ஸ் என்ற கலவையிலிருந்து…
சில்சர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்’ என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப் பூருக்கு சென்றிருந்த பாடகர் ஜூபின் கார்க் செப்டம்பர் 19-ம் தேதி திடீரென மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கலைத்துறையில் அவரது அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் விதமாகவும் ஜுபின் கார்க்கின் ஆத்மார்த்தமான இசையில் உருவாகி பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலான ‘மாயாபின்’ பெயரை புதிதாக பிறந்த பெண் யானைக் குட்டிக்கு சூட்டுவதென முடி வெடுக்கப்பட்டது. இவ்வாறு சோனாலி தெரிவித்துள்ளார்.
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவும், மற்றொரு மூத்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும், வரவிருக்கும் தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆரோன் பின்ச் கூறியதாவது: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடர்…
மதுரை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்க இணையவழி மனு தாக்கல் முறை ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இம்முறையில் வழக்கு தொடர்பான மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து, நீதிமன்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். இந்த முறையை பின்பற்றுவதில் சில சிரமங்கள் எழுந்ததால், உயர் நீதிமன்றத்தில் இணையவழி மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் அக். 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு உயர் நீதிமன்றத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளியியல்…
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும், 27 நாடு களின் கூட்டமைப்பான ஐரோப் பிய யூனியனிலிருந்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள் ளனர். இருதரப்பில் நடைபெறும் 14-வது கட்ட பேச்சுவார்த்தை இதுவாகும். இன்று (அக்.6) தொடங்கும் இந்த வர்த்தக பேச் சுவார்த்தை 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பேசும்போது, இந்தியா மற்றம் ஐரோப்பிய யூனியன் இடையி லான தடையற்ற வர்த்தக ஒப் பந்தத்தை வேகமாக செயல் பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பிலும் ஆக் கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந் தம் கையெழுத்தாகும் என நம் பிக்கை தெரிவித்திருந்தார். ஐரோப்பிய வர்த்தக ஆணை யர் மரோஸ்…
Last Updated : 06 Oct, 2025 07:43 AM Published : 06 Oct 2025 07:43 AM Last Updated : 06 Oct 2025 07:43 AM புதுடெல்லி: பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை. இதையைடுத்து பூடான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் 2 ஹெலிகாப்டர்களில் உடனடியாக விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய ஊழியர்கள் இருவரை மீட்டனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருவரையும் பூடான் ஹெலிகாப்டர் பின்னர்…
புதுடெல்லி: வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார். இதை உருவாக்கிய மென் பொறியாளர்கள் எல்லாம் தென் காசியில் உள்ள ஸ்ரீதர் வேம்பு வின் நிறுவனத்தில் பணியாற் றுபவர்கள். இதில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த அரட்டை செயலியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இணைந்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலியை பெருமை யுடன் பதிவிறக்கம் செய்துள் ளேன்” என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டு, எங்களுக்கு அதிக உறுதியை அளிக்கிறது” என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும், இந்த போட்டியில் வேவ்ஸ் எப்சி உள்ளிட்ட 4 அணிகள் பங்கேற்க போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதற்கான முறையான அனுமதியை மாவட்ட கால்பந்து சங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமிருந்தோ, அந்த போட்டியை நடத்துபவர்கள் பெறவில்லை. எனவே, இந்த போட்டியானது அங்கீகாரமற்ற அல்லது பதிவு செய்யப்படாத கால்பந்துப் போட்டியாகவே கருதவேண்டும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு தமிழ்நாடு…
