சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவும், மற்றொரு மூத்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும், வரவிருக்கும் தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆரோன் பின்ச் கூறியதாவது: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடர்…
Author: admin
மதுரை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்க இணையவழி மனு தாக்கல் முறை ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இம்முறையில் வழக்கு தொடர்பான மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து, நீதிமன்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். இந்த முறையை பின்பற்றுவதில் சில சிரமங்கள் எழுந்ததால், உயர் நீதிமன்றத்தில் இணையவழி மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் அக். 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு உயர் நீதிமன்றத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளியியல்…
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும், 27 நாடு களின் கூட்டமைப்பான ஐரோப் பிய யூனியனிலிருந்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள் ளனர். இருதரப்பில் நடைபெறும் 14-வது கட்ட பேச்சுவார்த்தை இதுவாகும். இன்று (அக்.6) தொடங்கும் இந்த வர்த்தக பேச் சுவார்த்தை 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பேசும்போது, இந்தியா மற்றம் ஐரோப்பிய யூனியன் இடையி லான தடையற்ற வர்த்தக ஒப் பந்தத்தை வேகமாக செயல் பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பிலும் ஆக் கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந் தம் கையெழுத்தாகும் என நம் பிக்கை தெரிவித்திருந்தார். ஐரோப்பிய வர்த்தக ஆணை யர் மரோஸ்…
Last Updated : 06 Oct, 2025 07:43 AM Published : 06 Oct 2025 07:43 AM Last Updated : 06 Oct 2025 07:43 AM புதுடெல்லி: பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை. இதையைடுத்து பூடான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் 2 ஹெலிகாப்டர்களில் உடனடியாக விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய ஊழியர்கள் இருவரை மீட்டனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருவரையும் பூடான் ஹெலிகாப்டர் பின்னர்…
புதுடெல்லி: வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார். இதை உருவாக்கிய மென் பொறியாளர்கள் எல்லாம் தென் காசியில் உள்ள ஸ்ரீதர் வேம்பு வின் நிறுவனத்தில் பணியாற் றுபவர்கள். இதில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த அரட்டை செயலியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இணைந்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலியை பெருமை யுடன் பதிவிறக்கம் செய்துள் ளேன்” என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டு, எங்களுக்கு அதிக உறுதியை அளிக்கிறது” என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும், இந்த போட்டியில் வேவ்ஸ் எப்சி உள்ளிட்ட 4 அணிகள் பங்கேற்க போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதற்கான முறையான அனுமதியை மாவட்ட கால்பந்து சங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமிருந்தோ, அந்த போட்டியை நடத்துபவர்கள் பெறவில்லை. எனவே, இந்த போட்டியானது அங்கீகாரமற்ற அல்லது பதிவு செய்யப்படாத கால்பந்துப் போட்டியாகவே கருதவேண்டும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு தமிழ்நாடு…
பகலில் தூக்கத்தை உணருவது நேற்றிரவு தூக்கத்தை எப்போதும் சார்ந்தது அல்ல. உண்மையில், ஒருவர் நுகரும் உணவு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. உணவு ஒரு எரிபொருள் மட்டுமல்ல, இது செயல்பாடு மற்றும் உற்பத்தித்திறனின் முக்கிய கட்டுப்பாட்டாளர். சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் நிறைந்த உணவு, இரத்த குளுக்கோஸை அதிகரிக்கும் மற்றும் நனைக்கலாம், இதனால் உங்களை மந்தமாக்குகிறது. மண் இரும்புகள் மற்றும் வைட்டமின்கள் இல்லாத உணவில் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கும், இதன் விளைவாக சோர்வு ஏற்படுகிறது. நம் உடலுக்கு தூக்கம் இயற்கையான மீட்டமைப்பு பொத்தானை போன்றது. போதுமான தூக்கத்தைப் பெறுவது நாளுக்கு நம் மனநிலையை வடிவமைக்கிறது. ஆனால் 8 முதல் 9 மணிநேர தூக்கத்துடன் கூட, நம்மில் பலர் இன்னும் மயக்கமடைகிறோம். தோரணை, மன அழுத்தம் மற்றும் சுகாதார நிலைமைகள் முக்கியமான காரணிகள் என்றாலும், நாம் செய்யும் உணவுத் தேர்வுகள் மிக முக்கியமானவை. சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல் ஆகியவை நம் உணவில் முக்கிய ஊட்டச்சத்துக்களின்…
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர்குமார் ஆகியோர், கோயிலுக்குள் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை அக். 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் திருவண்ணாமலைக்கு நேற்று சென்று, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு, அம்மனி அம்மன் கோபுரம் அருகே நடைபெறும் கட்டுமான பணி, கோயில் வளாகத்துக்குள் உள்ள விருந்தினர் இல்லங்களை ஆய்வு செய்தனர். பின்னர், கோசாலை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “கோயில் வளாகத்துக்குள் நிரந்தர கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது.…
பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிவதில் ஒரு கொலோனோஸ்கோபி முக்கியமானது என்றாலும், எல்லோரும் அதற்கு உட்படுத்தப்பட வேண்டுமா? “நீங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் திரையிடப்பட வேண்டும். உங்களிடம் அதிக ஆபத்து காரணிகள் இருந்தால், நீங்கள் முன்பே தொடங்க வேண்டியிருக்கலாம். மேலும், உங்கள் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக உங்கள் மருத்துவர் அதை பரிந்துரைக்கலாம்,” என்று அவர் கூறினார். ஆரம்பகால திரையிடலின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தி, “எனவே பயம் அல்லது தவறான தகவல்களைத் தடுக்க வேண்டாம். உங்கள் மருத்துவரிடம் பேசவும், நீங்கள் ஒருவருக்கு ஒரு கொலோனோஸ்கோபியைத் திட்டமிடவும். என்னை நம்புங்கள், உங்கள் எதிர்கால சுய நன்றி.”
சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்.10-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வளாகங்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட…
