Author: admin

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் கோரிக்கையை ஏற்கக்கூடாது என கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் வாதிடப்பட்டது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு உட்பட 9 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற த்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முத்துகுமரன்…

Read More

ஹைப்பர்யூரிசீமியா என்றும் அழைக்கப்படும் உயர் யூரிக் அமிலம், இந்த நாட்களில் பல இளம் வயதிலேயே அதிகரித்து வருகிறது. உங்கள் உடல் அதிகமாக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும்போது அல்லது சிறுநீர் மூலம் போதுமான அளவு அகற்றப்படும்போது இது நிகழ்கிறது. உடலில் அதிக யூரிக் அமில அளவு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை அல்லது தாமதமாகிவிடும் வரை கவனிக்கப்படாது. உடலில் நிலையான அதிக அளவு யூரிக் அமிலம் கீல்வாதம், சிறுநீரக கற்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு கூட்டு அல்லது சிறுநீரக சேதம் போன்ற வலிமிகுந்த நிலைகளுக்கு வழிவகுக்கும்.தெரியாதவர்களுக்கு, யூரிக் அமிலம் உடலில் ப்யூர்ஸை உடைப்பதற்கான துணை தயாரிப்பாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சிவப்பு இறைச்சி, கடல் உணவு மற்றும் ஆல்கஹால் போன்ற சில உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகிறது. எனவே, உடலில் உயர் யூரிக் அமில அளவிற்கு முன்கூட்டியே கண்டறிதல் எதிர்காலத்தில் சிக்கல்களை நிர்வகிப்பதற்கும் தடுப்பதற்கும் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக, நிலை மோசமடையும் வரை உடலில்…

Read More

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்வாக, இந்துக்கள் கோயில் கட்ட நிலத்தை தானமாக இஸ்லாமியர்கள் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் அலிநகர் உள்ளது. அங்கு தப்ரி கிராமத்தில் உள்ள சக்லைன் ஹைதர் என்ற இஸ்லாமியர் தம் உறவினரான அக்தர் அன்சாரிக்கு 1,364 சதுர அடி நிலத்தை தானமாக அளித்தார். இதில் அக்தர் தனக்காக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தச் செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஏராளமானோர் அந்த இடத்தில் கூடினர். சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் தற்காலிகமாக அருகிலுள்ள ஒரு கோவியில் வைக்கப்பட்டது. சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை சக்லைன் ஹைதரும்,…

Read More

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப் ​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செயலா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக ஜூலை 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடாணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி வடக்கு, விளாத்திகுளம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசும், மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகனுமாகிய இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read More

கேள்வி 5 விநாடிகள் டைமருடன் வந்தால், இந்த படத்தைப் பார்க்கும் உங்கள் மனதில் என்ன வருகிறது? முக்கிய தாடி, மூடிய கண்கள், சுருக்கமான முகம் -அது “வயதான மனிதர்” என்று கத்துகிறது. உங்கள் தலையிலும்? பெரும்பாலான மக்கள் முதலில் பிடிக்கிறார்கள். ஆனால் இல்லை, இது ஒரு நேரடி கேள்வி அல்ல, உங்கள் மூளையின் இயல்புநிலை அமைப்புகளை கொஞ்சம் சவால் செய்வோம்! நீங்கள் மனிதனை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றால், இடைநிறுத்தம் செய்யுங்கள். பெரிதாக்கவும், இன்னும் சிறிது நேரம் முறைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள, அபிமான பஞ்சுபோன்ற சிறிய நாயைக் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் மனம் “என்ன?!” என்று சென்றால், நீங்கள் தனியாக இல்லை.நேர்மையாக இருக்கட்டும் – பெரும்பாலான மக்கள் முதலில் மனிதனைக் கண்டுபிடித்தனர். வேறு எதற்கும் முன் மனித முகங்களைக் கண்டறிய எங்கள் மூளை கம்பி செய்யப்படுகிறது. நீங்கள் தாடி வைத்த மனிதனைப் பார்த்து, உங்கள் தலையை சொறிந்து கொண்டால்,…

Read More

புதுடெல்லி: “வர்த்தகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 26 முறை கூறிவிட்டார். போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அறிய விரும்புகிறோம்.” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அது தொடர்பாக அவைக்கு விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை தொடங்கிவைத்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி இருக்கிறார்கள். தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், மதத்தின் அடிப்படையில் மக்களை குறிவைக்கக்கூடாது என்று கூறியதை நாங்கள் கேட்டோம். யார் மீதும் வெறுப்பு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக சிலர் போராடுவதை…

Read More

சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உள்ளம், திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு வானளாவிய வெற்றியைத் தந்து பெரும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து,…

Read More

சர்க்கரை பசி பலவீனத்தின் அடையாளம் அல்ல, அவை உங்கள் மூளை, ஹார்மோன்கள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரியல் பதில். சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் மூளையின் வெகுமதி முறையைத் தூண்டுகின்றன, டோபமைனை வெளியிடுகின்றன மற்றும் தற்காலிகமாக உங்களை நன்றாக உணர வைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் காலப்போக்கில், உங்கள் உடலுக்கு உண்மையில் ஆற்றல் தேவையில்லை என்றாலும், இந்த முறை உங்கள் மூளையை மேலும் ஏங்குவதற்கு மாற்றியமைக்கிறது. அது அங்கே நிற்காது. மோசமான தூக்கம் உங்கள் பசி ஹார்மோன்களை நேரடியாக பாதிக்கிறது என்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. தூக்கமின்மையின் இரண்டு இரவுகள் கிரெலின் (பசியை அதிகரிக்கும் ஹார்மோன்) உயர்த்தலாம் மற்றும் லெப்டினைக் குறைக்கலாம் (முழுமையை சமிக்ஞை செய்யும் ஹார்மோன்). இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உங்களை பசியடையாது, இது உங்களை வேகமாக, சர்க்கரை திருத்தங்களை ஏங்க வைக்கிறது. அதனால்தான், சில மோசமான இரவுகளுக்குப் பிறகு,…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்லப்பட்ட சுலேமான் ஷா என்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இதற்காக ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டச்சிகாம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரப்படுத்தின. இந்த பின்னணியில், டச்சிகாம் அருகே லிட்வாஸ் என்ற பகுதியில் வெளிநாட்டு நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். ஜபர்வான் மற்றும் மகாதேவ் முகடுகளுக்கு…

Read More

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து, பூத் கமிட்டி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக ஒவ்வொரு பூத்துக்கும் 9 உறுப்பினர்களை கொண்ட கமிட்டியை அமைக்க அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் இருக்க வேண்டும். கிளைச் செயலாளர்கள் இடம் பெறக்கூடாது. 45 வயதுக்கு கீழே இருக்க வேண்டும். அந்தந்த வாக்குச்சாவடி மையத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தலைமை அறிவுறுத்தி இருந்தது. இப்பணியை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை கழகத்தில் இருந்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் இப்பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாவட்டங்களில் பூத்…

Read More