எங்கள் பாட்டி எப்போதும் மதிய உணவுடன் ஒரு கிண்ணம் தயிர் தயாராக இருந்தாரா அல்லது புதிதாக இட்லி இடி செய்ததை எப்போதாவது யோசித்தீர்களா? மாறிவிடும், எங்கள் பாரம்பரிய இந்திய புளித்த உணவுகள் வெறும் சுவையாக இல்லை, அவை செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. தோசா, காஞ்சி மற்றும் பகலா போன்ற இந்த வயதான சமையல் வகைகளில் இயற்கையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை உங்கள் வயிற்றை இலகுவாக உணரவும், வீக்கத்தைக் குறைக்கவும், உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. ஆடம்பரமான பொருட்கள் அல்லது விலையுயர்ந்த கூடுதல் தேவைகள் தேவையில்லை, அன்றாட உணவு நேரத்தின் சோதனையாக இருந்தது. எளிமையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட, மற்றும் ரகசியமாக குடல்-அன்பான நன்மை நிறைந்த இந்தியாவின் சிறந்த புளித்த உணவுகளில் 7 ஐ ஆராய்வோம்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தேசி புளித்த உணவுகள்தயிர் (தாஹி)தயிர் என்பது இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் சக்திவாய்ந்த புளித்த உணவாகும். இது உங்கள்…
Author: admin
புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவை இன்று தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். மக்களவையில் பேசிய அவர், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன. ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும், மே 10, 2025 அன்று, அதிகாலை 1.30 மணியளவில், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது.…
கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் இணைந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தை காணும் வகையில் நல்ல முடிவுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.” என்று அறிவித்தார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் இணைந்து மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண மலேசியா நெருங்கிய தொடர்பில் உள்ளது என அன்வர் கூறினார். இன்று (ஜூலை 28) நள்ளிரவு அமலுக்கு வரும் வகையில் கம்போடியாவும் தாய்லாந்தும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அன்வர் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி…
தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கோமதி அம்மள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர், காலை 4.41 மணிக்கு அம்மன் சந்நிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு, முன்னாள் அமைச்சர்…
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: குடிசை வீடு இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அந்த எண்ணம் 90 விழுக்காடு நிறைவேறியுள்ளது. கல் வீடுகள் கட்டப்பட்டதால், தீ விபத்துகள் புதுச்சேரியில் குறைந்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுக்கு என்ன…
அந்த ஐரோப்பா பயணத்தைப் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது கடினமான ஒன்றாகும். இது வரலாற்று நகரங்கள், ஆல்பைன் சிகரங்கள் மற்றும் அழகிய நதிகளின் முடிவற்ற விருப்பங்களை வழங்குகிறது, மேலும் பலவற்றை பிடித்தது நிச்சயமாக ஒரு பணியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் விருப்பத்தேர்வுகள், பட்ஜெட் மற்றும் பயணத்தைத் திட்டமிடும்போது நீங்கள் நினைக்கும் எதையும் பொறுத்து விருப்பங்களை பிரிப்பது நல்லது. இங்கே, தண்ணீரில் சூழப்பட்ட மற்றும் தீவு நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.இந்த கட்டுரை தலைப்புடன் உங்கள் விருப்பம் ஒத்துப்போகிறது என்றால், சைப்ரஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, மால்டா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் தீவு நாடுகளை இங்கே உன்னிப்பாகக் கவனியுங்கள், அங்கு கடல் காற்று, கடலோர கவர்ச்சி மற்றும் பல நூற்றாண்டுகளின் கடற்படை மரபு ஆகியவை தேசிய தன்மையை வரையறுக்கின்றன.
திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கொலை தொடர்பாக சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தற்போது அவரது தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் பெயர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன? – தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். உறவினருடன் மருத்துவமனை முன்பு…
பருவமழை மும்பை தொடர்ந்து வெள்ளம் வருவதால், நியூரோசிஸ்டிகெர்கோசிஸின் வளர்ந்து வரும் ஆபத்து குறித்து மருத்துவர்கள் அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர், இது பன்றி இறைச்சி நாடாப்புழு டேனியா சோலியத்தால் ஏற்படும் கடுமையான மூளை தொற்று. இந்த தொற்று முக்கியமாக குறைவான சமைத்த பன்றி இறைச்சி அல்லது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது, மோசமான சுகாதாரம், வெள்ளம் மற்றும் சுகாதார குறைபாடுகள் காரணமாக பருவமழை பருவத்தில் தீவிரமடையும் அபாயங்கள். நியூரோசிஸ்டிகர்கோசிஸ் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் நாள்பட்ட தலைவலி போன்ற கடுமையான நரம்பியல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் உள்ளவர்கள். மாற்ற முடியாத சேதத்தைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ தலையீடு மிக முக்கியமானவை.மூளை பாதிப்பை ஏற்படுத்தும் நாடாப்புழு மக்கள் சமைத்த பன்றி இறைச்சியை உட்கொள்ளும்போது அல்லது அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் நாடாப்புழு முட்டைகளை உட்கொள்ளும்போது, மனித குடலில் (டேனியாசிஸ்) டேனியா…
புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதே அரசின் முதன்மையான இலக்காக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மத்திய அரசைப் பொருத்தவரையில் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவது, அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குவது ஆகியவற்றை முதன்மை யான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு ஆண்டும் மூலதன செலவினங்களை அதிரிக்க வேண்டும் என்று நிதியமைச்சகத்துக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதனால்தான் பொது முதலீட்டுக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. எனக்கு தெரிந்த தரவுகளின் அடிப்படையில், முதலீடு என்பது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையான அடிப்படை. அந்த வகையில், இந்தியா அதிக முதலீட்டைப் பெறுவதற்கு இந்தியாவின் நட்பான அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) கொள்கை மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. தற்போது முதலீடுகளை ஈர்க்க…
கம்போடியா, தாய்லாந்து இடையிலான போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சமரசத்தை உருவாக்க தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் இன்று மலேசியாவில் சந்திக்கின்றனர். கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோர் இன்று (ஜூலை 28) பிற்பகல் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் தலைவராக மலேசிய பிரதமர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. மோதல்களைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 5-வது நாளாக நீடிக்கும் இந்த போரில் இருதரப்பிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 2,60,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்துள்ளனர். இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றதுடன்,…
