தேனி: நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பைக்கு வர உள்ளது. மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்தில்தான் கேரளாவின் பெரிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சபரிமலை உள்ளிட்ட பல கோயில்களில் சுவாமிக்கு நெற்கதிர்களை படைத்து வழிபாடு நடைபெறுவது வழக்கம். இது நிறைபுத்தரி (நிறையும் புது அரிசி) என அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (புதன்) அதிகாலை 5.30 மணிக்கு இந்த வழிபாடு தொடங்க உள்ளதால் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இதற்காக புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள், அச்சன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சிறப்பு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருஆபரணப்பெட்டியில் இந்த நெற்கதிர்கள் இன்று மாலையில் பம்பைக்கு வர உள்ளது. தொடர்ந்து அங்குள்ள கணபதி கோயிலில் பூஜை செய்யப்பட்டு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.…
Author: admin
Last Updated : 29 Jul, 2025 05:50 AM Published : 29 Jul 2025 05:50 AM Last Updated : 29 Jul 2025 05:50 AM தஞ்சாவூர்: தஞ்சாவூர் முத்துக்குமார மூப்பனார் சாலையில் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் உள்ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை மாநகராட்சிக்கு சொத்துவரி புதைசாக்கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்குள் செலுத்துமாறு கலைஞர் அறிவாலயத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கலைஞர் அறிவாலயத்துக்கு வணிகப் பயன்பாட்டுக்கான வரி செலுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அறிவாலயத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் நூலகம் இருப்பதால், வணிகப்பயன்பாட்டு வரியை நீக்குமாறு பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. வரியை குறைத்தால், வரியை முழுமையாகச் செலுத்த தயாராக உள்ளோம்’’ என்றனர். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்……
சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது. இந்த புதிய திட்டத்தில் (என்எப்ஓ) இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். என் எப்ஓ காலத்தில் குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு சந்தையில் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்யலாம். விலை உயரும் பங்குகள்: பொதுவாக மொமென்டம் முதலீடு என்பது விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்குவதாகும். இருப்பினும், மொமென்டம் விலை சார்ந்தது மட்டுமல்ல. வருவாய் மொமென்டம் என்பது வலுவான அடிப்படைக் காரணிகளால் ஆதரிக்கப்படும். மேல்நோக்கிய வருவாய் திருத்தங்கள் மற்றும் சாதகமான…
பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார். வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 2-வது ரேபிட் போட்டியில் இனியன், 1.5 – 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். ஆக.11-ல் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப்: சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் 11 முதல் 13-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த…
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை ஓயமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். பொதுமக்கள் அனைவருமே ஸ்டாலினின் மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர். இந்த ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த ஆட்சிக்கு குற்றங்களை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. மக்களே மக்களை பாதுகாத்துக் கொள்ளும் அவலமான ஆட்சி நடக்கிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியின்மீது வெறுப்பிலும், கடும் கோபத்திலும் உள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவுகட்டி நல்லாட்சியைத் தர வேண்டும் என என்னைச் சந்தித்த அனைவரும் கேட்டுக்கொண்டனர். தாலிக்குத் தங்கம் திட்டத்தை தாய்மார்களும், பெண்களும், அதிமுக…
சென்னை: ‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. பண்டைய பாரதத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்களித்த நமது பாண்டிய நாட்டு முத்துக்களின் பெருமை குறித்து தூத்துக்குடி மண்ணில் துல்லியமாக விவரித்த பிரதமரின் வரலாற்று ஞானம் கண்டு அதிசயித்துப்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோவிந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவையொட்டி தினமும் காலை ஆடிப்பூரக் கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழாவின் 5-ம் நாள் காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 5 கருட சேவையும், 7-ம் நாள் விழாவில் சயன சேவையும் நடைபெற்றன. 8-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆண்டாள், பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். கள்ளழகர் சீர்வரிசை: நேற்று காலை ஆண்டாள்,…
ஒவ்வாமை, தொற்று (கான்ஜுண்டிவிடிஸ்), தூக்கமின்மை அல்லது அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடு ஆகியவற்றால் அடிக்கடி ஏற்படுகிறது. பெரும்பாலும், சிறிய இரத்த நாளங்கள் கண்ணின் மேற்பரப்புக்கு அடியில் உடைகின்றன, இது இரத்தத்தை சிக்க வைக்கிறது மற்றும் கண்ணின் வெள்ளை பகுதியை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. காலவரிசைப்படி ரத்தக் கண்கள் வீக்கம் அல்லது அடிப்படை தன்னுடல் தாக்கம் அல்லது முறையான நிலைமைகளை அடையாளம் காட்டக்கூடும்.
ஒரு சமீபத்திய ஆய்வில், நீண்டகால வேலை நேரம் மூளை கட்டமைப்பில் மாற்றங்களைத் தூண்டக்கூடும், இது அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கும். சுகாதாரப் பணியாளர்களின் மூளை ஸ்கேன்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், வாரந்தோறும் 52 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் நபர்களிடையே நிர்வாக செயல்பாடுகளையும் உணர்ச்சி ஒழுங்குமுறைகளையும் நிர்வகிக்கும் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிந்தனர். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறீர்களா? சரி, இது உங்கள் சம்பள காசோலையை எவ்வாறு பிரதிபலிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது நிச்சயமாக உங்கள் மூளையை மாற்றப்போகிறது. ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வில் நீண்ட வேலை நேரம் மூளை கட்டமைப்பை மாற்றக்கூடும் மற்றும் உங்கள் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கூட பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வில் நீண்ட வேலை நேரம் மூளையின் கட்டமைப்பை மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் தொழில்சார் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழில்…
புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்தும் விவாதம் நடத்த…
