இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர் ‘செஃப்’ தாமு என்று அழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
உணவுத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். பல விருதுகளை வென்றுள்ள இவர், 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகுந்த பெற்றார். வரும் நவம்பர் 5 அன்று லண்டனில் நடைபெறவுள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமையல் துறையில் இளைஞர்கள் சாதிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரது திடீர் மறைவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல செஃப் தாமு காலமானார்:சாதனையாளர் விருது பெறவிருந்த நிலையில் சோகம்!
Leave a Comment
