தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
மேலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் நாட்களில் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
