சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
குறிப்பாக சென்னை நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நள்ளிரவு 12 மணியளவில் வெள்ளநீர் சூழ்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால் இதைவிட வைரலானது அடுத்த சில மணி நேரத்தில் வெளியான இந்த மீம் தான்.
நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளத்தில் மூழ்கிய சென்னை…
அதே இடம் அதிகாலை 5 மணிக்கு கிட்டத்தட்ட தண்ணீர் இல்லாமல் கிளீன்!
இதைத்தான் வைத்து உருவாக்கப்பட்ட மீமில், தண்ணீரை லாரி மூலம் உறிஞ்சும் காட்சியும், அந்த பைப்பை விஜய் பிடித்துக்கொண்டு சிரிப்பது போலவும், அருகில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மழை வந்த வேகத்துக்கு வெள்ளம்…
வெள்ளம் வந்த வேகத்துக்கு மீம்…
மீம் வந்த வேகத்துக்கு அரசியல் கலாய்ப்பு!
இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
