
சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
சென்னையில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய மோடி, ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்குமான தனது உறுதி தொடர்ந்து இருப்பதாக கூறினார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவோம் என்றும், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மூலமாக வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்றும் மோடி தெரிவித்தார்.
மேலும், நகர்ப்புற வளர்ச்சி மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக கூறிய அவர், நவீன நகரங்களில் போக்குவரத்து வசதிகள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை 5 நகரங்களில் இருந்து 25 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான மெட்ரோ, சாலை, ரயில்வே மற்றும் துறைமுகத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
