
வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் செயல்பட உள்ளன.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ள நிலையில், பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக SBI உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் அன்றைய தினம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கமான வங்கி சேவைகளைப் பெற முடியும்.
தனியார் வங்கிகளுக்கு இந்த அறிவிப்பு கட்டாயமில்லை என்பதால், அந்த வங்கிகளின் கிளைகள் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இருக்கலாம்.
