தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
821 காலிப் பணியிடங்கள்: இதில் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட மொத்தம் 821 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட்டது. இதற்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வர்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
- https://tnpsc.gov.in/home.aspx என்ற டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Hall Ticket Download’ அல்லது ‘One Time Registration (OTR)’ பகுதியைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் OTR Login ID மற்றும் Password அல்லது விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்.
- திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை (Captcha) உள்ளிட்டு ‘Submit’ பொத்தானை அழுத்தவும்.
- உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றியதும் அதைப் பதிவிறக்கம் செய்து, அச்சுப் பிரதியை எடுத்துக்கொள்ளவும்.
தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரை: தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டில் உள்ள பெயர், தேர்வு மையம், தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
