தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75), இன்று சென்னையில் காலமானார். அவரது இசையுலகப் பங்களிப்பைப் போற்றும் வகையில் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவா, மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி வெளியானதும் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்வர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகருமான எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தேவாவின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில், தேவாவை அருமையான சொக்கத் தங்கம் என்று புகழ்ந்து, அவரது திடீர் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
அரசு மரியாதை: இசையுலகிற்கு தேவா ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
