
- ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 45-ல் உள்ள இல்லத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் என்.டி. ராமராவ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடு, அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளமாக உள்ளது
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா அலைஸ் பாலைய்யா. தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் பாலகிருஷ்ணா. 65 வயது கடந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஆந்திராவின் இந்துபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார் பாலகிருஷ்ணா. ‘மாஸ் கடவுள்’ என்று தெலுங்கு சினிமாவில் வர்ணிக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணா இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
எல்லோருக்கும் தெரிந்தது போல் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல்வரான என்டிஆரின் 6வது மகன் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தந்தையை பின்பற்றி சினிமாவுக்குள் வந்தார். தனது 14வது வயதில் நடிக்கத் தொடங்கிய பாலைய்யா என்டிஆர் முதல்வரான காலகட்டத்தில் பீக்கில் இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 50 வருடமாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஒரு ஹீரோவாக மட்டுமே நடித்து திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலய்யாவின் கடைசி ஐந்து படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கிறது.
