விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ரணபலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த டீசரில் வன்முறை மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ரணபலி டீசருக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, குழந்தையை மிதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுபோன்ற காட்சிகள் காரணமாகவே டீசருக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரணபலி திரைப்படம் 1876 முதல் 1878 வரை நடைபெற்ற பெரும் பஞ்சத்தின் பின்னணியில் உருவாகியுள்ள வரலாற்று ஆக்ஷன் திரைப்படமாகும். விஜய் தேவரகொண்டா ரணபலி கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
