
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி தன்னை நீக்கியதால் தான் இன்று அமைச்சராக உள்ளதாகவும், விரைவில் மேலும் 15 பேர் வெளியே வருவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதால் தான் இன்று அமைச்சராக உள்ளேன் என்றும் விரைவில் இன்னும் 15 பேர் வர உள்ளனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையினை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய செங்கோட்டையன், இன்று அரசுக்கு 13 லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி மட்டுமே 347 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் அத்தனை பேரும் இன்றைக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய முடிகிறது.
