
அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 3 தி கன்க்ளூஷன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அக்டோபர் 2ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 10 நாட்களில் இந்தியாவில் ரூ.309.50 கோடி நிகர வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.480.40 கோடி வசூலை கடந்துள்ளது.
10வது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.23 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அஜய் தேவ்கனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக த்ரிஷ்யம் 3 மாறியுள்ளது.
முதல் வாரத்திலேயே ரூ.245.50 கோடி இந்திய நிகர வசூலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வார இறுதியிலும் படத்தின் வசூல் வலுவாக தொடர்ந்தது.

த்ரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் ரூ.480 கோடியை கடந்ததன் மூலம் 2026ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்த மூன்றாம் பாகம், ஏற்கனவே முடிவுக்கு வந்ததாக நினைக்கப்பட்ட வழக்கு மீண்டும் திறக்கப்படுவதால் உருவாகும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளது.
