பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து பின்னர் ஏமாற்றியதாக வஹிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தங்களுக்குள் உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவை வஹிதா முன்வைத்த குற்றச்சாட்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் வஹிதா வெளியிட்டதாக கூறப்படும் வீடியோக்களில், முத்துக்குமரன் அவரிடம் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, வஹிதாவின் முகத்தை பிடித்துக்கொண்டு இந்த மூஞ்சியை எனக்கு பிடிச்சிருக்கு என்று முத்துக்குமரன் கூறும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதற்கிடையே இருவரும் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றையும் வஹிதா வெளியிட்டுள்ளார். அதில், நட்பாக பழகிய ஒருவர் எப்படி படுக்கை வரை சென்றார் என்றும், தனக்கு false hope கொடுத்ததாகவும் வஹிதா கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது. அதற்கு முத்துக்குமரன் இந்த விவகாரத்துக்கு என்ன முடிவு வேண்டும் என்றும், தான் எப்போது தவறாக நடந்துகொண்டேன் என்றும் கேட்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம், முத்துக்குமரன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தானும் வஹிதாவும் நண்பர்களாக மட்டுமே இருந்ததாகவும், காதல் உறவு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகள் எடிட் செய்யப்பட்டவை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வஹிதாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவை தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் முத்துக்குமரன் தரப்பின் மறுப்பு, வஹிதா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், வெளியாகியுள்ள வீடியோக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் ஆகியவை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகின்றன. இந்த விவகாரத்தின் உண்மை நிலை காவல்துறை விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலமே உறுதி செய்யப்பட வேண்டும்.
