
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் சென்னையில் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் விவகாரங்கள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து விஜய் மற்றும் ராகுல் காந்தி அருகிலுள்ள கஃபேவுக்கு சென்று காபி, டிராமிசு மற்றும் குக்கீஸ் சாப்பிட்டபடி உரையாடினர்.
காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி தொடர்பான அரசியல் ஒருங்கிணைப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி சந்திப்புக்கு மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியுடன் விஜய் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ததும் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
