
குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 9.27 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடையில், தனித்தனியாக உணவு பாதுகாப்பு தரத்துடன் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஸ்டு ஃப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லெட் மற்றும் பட்டர் அல்லது மில்க் என நான்கு வகையான சுவைகளில் கேக்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினத்தன்று மதிய சத்துணவுடன் சேர்த்து மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான நாளாக மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
