பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் பணம் பெறப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பள்ளிகளுக்கான அரசு அனுமதிகள் மற்றும் அங்கீகாரங்களை பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் விசாரணை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.

This post is a gem for political enthusiasts. The critical analysis of political decision-making is both enlightening and thought-provoking. It’s clear the author has a deep understanding of the intricacies involved.