
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளுடன் தோல்வியடைந்துள்ளனர்.
குறிப்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் 5 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் சீமான், இனி வரும் தேர்தல்களில் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.
இதே நேரத்தில், தவெக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இதனால் விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு மத்தியில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனது அடுத்தகட்ட தேர்தல் வியூகத்தை எப்படி அமைக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
