
டெல்லியின் முக்கிய போராட்ட தளமான ஜந்தர் மந்தரை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ இடம் என்ற அந்தஸ்தில் இருந்து டெல்லி போலீசார் நீக்கியுள்ளனர்.
இதற்கு பதிலாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள CBD மைதானம் ஆகிய மூன்று இடங்கள் புதிய போராட்ட தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய போராட்ட தளங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தனியாக வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக போலீசாரிடம் அனுமதி கோர வேண்டும் என்றும், அதிகபட்சமாக 1,000 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் விதிமுறைகள் இருந்தன.
பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த முக்கிய இடமாக ஜந்தர் மந்தர் இருந்து வந்த நிலையில், தற்போது அது அதிகாரப்பூர்வ போராட்ட தளமாக நீக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
