Author: admin

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வழங்க வலியுத்தி வரும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே ஜி-4 எனப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா-வின் பாதுகாப்பு அவையை சீர்திருத்துவது உட்பட ஐநா அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியேரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர மற்றம் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என 4 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில்…

Read More

திருச்சி: நாமக்கல் மற்றும் கரூர் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் தனிவிமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். கடந்த செப்.13-ம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். திருச்சியில் துவங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் மூன்று சொகுசு கார்கள் அவருக்காக நின்றிருந்தன. அதில் கருப்பு கலர் பார்ச்சூன் காரில் அவர் ஏறினார். மற்ற இருகார்களில் அவரது பாதுகாவலர்கள், பவுன்ஸர்கள் சென்றனர். திருச்சியில் இருந்து சாலைமார்க்கமாக நாமக்கல் செல்லும் விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாலை கரூரில் பிரச்சாரம் செய்கிறார். மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு இன்றிரவு 9 மணியளவில் வரும் தவெக தலைவர் விஜய், தனிவிமானம் மூலம் சென்னை…

Read More

59 வயதில், கடந்த ஆண்டு ஷாருக் கான், ஆர்.ஜே. தேவங்க்கானாவுடன் பேசியபோது, ​​தனது விருப்பமான உணவை வெளிப்படுத்தினார், அதில் முளைகள், வறுக்கப்பட்ட கோழி, ப்ரோக்கோலி மற்றும் டாலின் சிறிய பகுதிகள், அவரது இளமை தோற்றத்தையும் உடற்பயிற்சி மட்டத்தையும் பராமரிக்க. ஷாருக்கானின் இந்த அடிப்படை உணவு, ஆனால் கவனமுள்ள முறை குடல் சுகாதார நிபுணர் மற்றும் இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால் மனிகம் ஆகியோரின் ஆர்வத்தை ஈர்த்தது, அவர் வயதான தடுப்பு மற்றும் பொது ஆரோக்கியத்திற்கான உணவின் நன்மைகளை விவரித்தார். பார்ப்போம் …

Read More

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், லாலு பிர​சாத் யாத​வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்​ளார். தனது கட்​சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிர​தாப் பெயர் சூட்​டி​யுள்​ளார். கட்​சி​யின் சின்​ன​மாக ‘கரும்​பல​கை’ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத்​தின் மூத்த மகன் தேஜ் பிர​தாப். காங்​கிரஸ், ஆர்​ஜேடி கூட்​டணி ஆதர​வுடன் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்த போது, கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு தேஜ் பிர​தாப் கேபினட் அமைச்​ச​ராக இருந்​தார். இவரது மனைவி ஐஸ்​வர்யா ராயுடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால் பிரிந்து வாழ்​கிறார். இவர்​களது விவாகரத்து வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இதற்​கிடை​யில், கடந்த மே மாதம் தேஜ் பிர​தாப் தனது சமூக வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட ஒரு பதி​வில், அனுஷ்கா என்ற பெண்​ணுடன் சேர்ந்து வாழ்​வ​தாக கூறி​யிருந்​தார். பின்​னர் அந்​தப் பதிவை தேஜ்…

Read More

ஆசியக் கோப்பை டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளது, ஏனெனில் நாங்கள் சிறப்பான அணி என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி எந்தக் காலத்திலுமே கணிக்க முடியாத ஒரு அணியே. ஒரு போட்டியில் அசிங்கமாக இப்படியெல்லாம் தோற்க முடியுமா என்று ஆச்சரியப்படுவது போல் தோற்பார்கள், பிறகு இப்படியெல்லாம் வெற்றி பெறவும் முடியுமா என்பது போல் ஆச்சரியமான வெற்றியையும் பெறுவார்கள், எப்போது எது நிகழும் என்பது அவர்களுக்கே தெரியாது. அன்று வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்று சரிவு கண்டு, பிறகு அவர்கள் பாஷையில், ‘உலகத்தர ஸ்பின்னர் முகமது நவாஸ்’ பேட்டிங்கிலும் முகமது ஹாரிஸ் பேட்டிங்கிலும் மீண்டும் 135 ரன்களை எட்டியது. சரி வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக நன்றாக ஆடியது போல் பாகிஸ்தானை வீழ்த்தி விடுவார்கள் என்று பார்த்தால்…

Read More

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயம், பண்டைய பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் மையமாகத் திகழ்கிறது. வைணவத்தைப் பரப்புவதையும், பக்தி மார்க்கப் பணிகளை செய்வதையும் தலையாயப் பணியாகக் கொண்டு இம்மையம் செயல் பட்டு வருகிறது. வைணவ சம்பிரதாயம் செழித்து வளர, பகவத் ராமானுஜர் சீரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். தனது ஆயிரக்கணக் கான சீடர்களில் இருந்து 74 பேரைத் தேர்வு செய்து, ஸ்ரீமன் நாராயணனின் சேவைக்காக நியமித்தார். இவர்கள் வைணவ சம்பிரதாயத்தின் கடமைகளை உலகம் முழுவதும் பரப்பு வதையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர். 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவரின் வம்சாவளியில் அவதரித்த உ.வே. ஸ்ரீ அத்தங்கி திருமலாச்சாரியாரின் கைங்கர்யம் அளப்பரியது. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை 200 ஆண்டு காலபழமையானது. லட்சுமி நரசிம்ம பெருமாளை பிரதான தெய்வமாகக் கொண்டு, இங்கு தினசரி ஆராதனை நடந்து வருகிறது.…

Read More

சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுதவிர, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘மக்கள் கலைஞர்’ என்றும் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம், கல்லூரி சாலைக்கு `ஜெய்சங்கர் சாலை’ என்றும், நாடக நடிகரும், தமிழகத்தின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான…

Read More

மாரடைப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது, மேலும் பலர், குறிப்பாக 65 வயதிற்குட்பட்ட பெண்கள், அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், அவை நுட்பமானவை அல்லது பிற காரணங்களுக்காகக் கூறப்படுகின்றன. அடைபட்ட தமனிகள் பெரும்பாலும் முக்கிய குற்றவாளி என்று கருதப்பட்டாலும், பிற காரணிகள் தீவிரமான இருதய நிகழ்வுகளைத் தூண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 1,474 மாரடைப்புகளிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது மற்றும் பெண்களில் பல வழக்குகள் வழக்கத்திற்கு மாறான காரணிகளால் ஏற்படுகின்றன, அவை அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை அல்லது தவறாக கண்டறியப்படுகின்றன. இந்த மறைக்கப்பட்ட காரணங்களைப் புரிந்துகொள்வது துல்லியமான சிகிச்சை மற்றும் நீண்டகால மீட்புக்கு முக்கியமானது.மறைக்கப்பட்ட மாரடைப்பு பெண்களுக்கு காரணங்கள்ஆண்களின் மாரடைப்புகளில் 75% பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைக் கொண்டிருந்தாலும், இது 47% பெண்களின் வழக்குகளை மட்டுமே விளக்குகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. வழக்கத்திற்கு மாறான காரணங்களில் எம்போலிஸங்கள், மன அழுத்தம் தொடர்பான…

Read More

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தானின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் ராணுவம் இந்தியாவிடம் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது. அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் போலத் தோன்றினால், பாகிஸ்தான் அதை அனுபவிக்க வரவேற்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களைக் கொன்ற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ தீவிரவாத அமைப்பை பாதுகாக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

Read More

சென்னை: நீலக்​கொடி கடற்​கரை திட்​டத்தை எதிர்த்து சென்​னை​யில் மீனவர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை கடற்​கரைகளில் அமல்​படுத்​தப்​படும் நீலக்​கொடி கடற்​கரை, கடல்​ மேம்​பாலம், எண்​ணெய் எரி​வாயு போன்ற திட்​டங்​களை எதிர்த்து தென்​சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்​பாக மீனவர்​களின் கண்டன ஆர்ப்​பாட்​டம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. சபை​யின் ஒருங்​கிணைப்​பாளர் என்​.ரத்​தினவேல் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீலக்​கொடி திட்​டம் வந்​தால் கடற்​கரை​யில் இருக்​கக்​கூடிய மீனவர்களின் கட்​டுமரங்​கள், வலைகள், ஃபைபர் படகு​கள் ஆகிய​வற்றை அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​படும். இத்​திட்​டம் உலக நாடு​களுக்கு பொருந்​தும். ஆனால் இந்​தியா போன்ற நாடு​களுக்கு பொருந்​தாது. ஏனென்​றால் இங்கு கரைதொழில் செய்​யக்​கூடிய மீனவ சமூகங்​கள் நிறைய உள்​ளன. மீன் பிடித்​தொழில் நடை​பெறும் இடத்​தில் நிச்​சய​மாக மீன் வாடை வரும். ஆனால் ஒரு வெளி​நாட்​ட​வர் நம் கடற்​கரைக்கு வந்​தால் மீன் வாடை வரு​கிறது என்ற புகார் நிச்​ச​யம் அளிப்​பார்.…

Read More