Author: admin

குவெட்டா: ​பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது. அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. அந்த மாகாண மக்​கள் மிக நீண்ட கால​மாக தனி நாடு கோரி போராடி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ராணுவ அடக்​கு​முறை​யில் இது​வரை லட்​சக்​கணக்​கான மக்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர். பலுசிஸ்​தானின் அண்டை மாகாண​மான கைபர் பக்​துன்​கவா பகுதி மக்​களும் பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக தொடர் போராட்டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அந்த மாகாணத்​தின் மாட்ரே தாரா கிராமத்​தின் மீது பாகிஸ்​தான் விமானப் படை அண்​மை​யில்…

Read More

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை​யிலும், இரவு சந்​திர பிரபை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்பாலித்​தார். திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்​றத்​துடன் பிரம்​மாண்​ட​மாக தொடங்​கியது. அதே நாள் மாலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கினர். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் மலை​யப்​பர் வீதி உலா​வுடன் பிரம்​மோற்சவ விழா​வின் வாகன சேவை​கள் தொடங்​கப்​பட்​டன. இதனை தொடர்ந்​து, சின்ன சேஷ வாக​னம், அன்ன வாக​னம், சிம்ம வாக​னம், முத்து பல்​லக்கு வாக​னம், கற்பக விருட்ச வாக​னம், சர்வ பூபால வாக​னம், மோகினி அலங்​காரம், கருட சேவை, அனு​மன் வாக​னம், தங்க ரத ஊர்​வலம் மற்​றும் கஜ வாக​னம் என வரிசை​யாக கடந்த 6 நாட்​களில் ஒவ்​வொரு வாக​னத்​தி​லும் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி 4 மாட வீதி​களில்…

Read More

அறி​முக இயக்​குநர் சுரேஷ் பாரதி இயக்​கி​யுள்ள படம், ‘வீர தமிழச்​சி’. இதில் சஞ்​சீவ் வெங்​கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்​தி, மாரி​முத்​து, வேலராமமூர்த்​தி, கே. ராஜன், மீசை ராஜேந்​திரன், ஜெயம் கோபி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். சங்​கரலிங்​கம் செல்​வகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப் படத்​துக்கு ஜூபின் இசையமைத்​துள்​ளார். மகிழினி கலைக்​கூடம் சார்​பில் சாரதா மணிவண்​ணன், மகிழினி இணைந்து தயாரித்​துள்​ளனர். இதன் இசை மற்​றும் முன்​னோட்ட வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர்​கள் ஆர்​.​வி.உதயகு​மார், பேரரசு சிறப்பு விருந்​தினர்​களாகக் கலந்து கொண்​டனர். விழா​வில் இயக்​குநர் சுரேஷ் பாரதி பேசும்​போது, ‘‘கட்​டிடத் தொழிலா​ளி​யாக ரூ.35 சம்​பளத்​தில் வேலை செய்த நான், இன்று இயக்​குந​ராக உயர்ந்​துள்ளேன். 2016-ம் ஆண்டு ‘கொஞ்​சம் கொஞ்​ச​மாக..’ எனும் குறும்படத்தை இயக்​கினேன். அது சிறந்த விழிப்​புணர்வு குறும்​பட​மாகத் தேர்வு செய்​யப்​பட்​டு, தமிழக முதல்​வரிடம் விருது பெற்​றேன். 18 குறும்​படங்​களை இயக்​கி​யுள்ளேன். 36 விருதுகளை வென்​றிருக்​கிறேன். அதற்​குப் பிறகு ஒரு கதையை…

Read More

கரூர்: கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்​து, பாஜக தேசி​யத் தலை​வர் ஜே.பி. நட்டா உத்​தர​விட்​டார். அதன்​படி, ஹேம​மாலினி தலை​மையி​லான குழு​வினர் நேற்று கரூர் வந்​தனர். அவர்​கள், வேலு​சாமிபுரத்​தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்​ததுடன், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.பின்​னர், எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர் ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்​த​போது, அவர்​கள் கூறு​வதைக் கேட்டு தாங்க முடி​யாத வேதனை ஏற்​பட்​டது. நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு…

Read More

சென்னை: இந்த ஆண்டு முதல், கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களில் (பிஏ, பிஎஸ்​சி) சேரு​வதற்​கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்​கள் மற்​றும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு 43 ஆகவும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தற்​போது, கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை பட்​டப் படிப்​பு​களில் (பிஏ, பிஎஸ்​சி,பிசிஏ, பி.​காம், பிபிஏ, பிபிஎம் போன்​றவை) சேரு​வதற்​கான வயது வரம்பு 21 ஆக இருந்து வரு​கிறது. மாற்​றுத் திற​னாளி​களுக்கு 5 ஆண்​டு​களும், எஸ்​சி, எஸ்​டி, எம்​பிசி, பிசி, பிசி-​முஸ்​லிம் ஆகிய இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்​கும், பெண்​களுக்​கும் 3 ஆண்​டு​கள் வயது வரம்​பில் தளர்வு அளிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், நடப்பு கல்வி ஆண்​டில் (2025-2026) மாணவர்​களின்​ நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி​பெறும், மற்​றும் சுயநிதி கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை பட்​டப்​படிப்பு சேர்க்​கைக்​கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்​களுக்​கும் 40 என…

Read More

ஷார்ஜா: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக் சர்​வ​தேச லீக் டி 20 (ஐஎல்​டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி​யில் இணைந்​துள்​ளார். இலங்கை வீரர் குஷால் மெண்​டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்​திக் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்த ஆண்​டில் தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற்ற எஸ்​ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்​காக​வும் தினேஷ் கார்த்​திக் விளை​யாடி இருந்​தார். அதேவேளை​யில் ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக​வும் பணி​யாற்றி வரு​கிறார். தினேஷ் கார்த்​திக் 412, டி 20 ஆட்​டங்​களில் விளை​யாடி 7,437 ரன்​கள் சேர்த்​துள்​ளார். இதில் 35 அரை சதங்​கள் அடங்​கும் ஸ்டிரைக் ரேட் 136.66 ஆகும்​. ஹாக்கியில் இந்தியா வெற்றி: இந்​திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. அங்கு கான்​பெரா சில் அணிக்கு எதி​ராக இந்​திய இளம் அணி நேற்று 4-வது ஆட்​டத்​தில் மோதி​யது. கான்​பெரா நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில்…

Read More

திருமலை: மனிதர்​களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்​லாம். கடவுளுக்கு கிடை​யாது. இதைத்​தான் திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு செய்​யும் கைங்​கர்​யங்​கள் நமக்கு போதிக்​கிறது. இன்று பிரம்​மோற்​சவத்​தில் காலை தேர்த்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இந்த தேரின் உச்​சி​யில் சவர தொழிலா​ளர்​கள் வழங்​கும் தங்க குடை​தான் அமைக்​கப்​படு​கிறது. அதன் கீழ்​தான் உற்சவ மூர்த்​தி​கள் தேரில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்பாலித்து வரு​கின்​றனர். திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நடை​பெறும் கைங்​கர்​யங்​களை உற்று நோக்​கி​னால், ஜாதி, மதம் என்​பது பெரு​மாளுக்கு கிடை​யாது என்​பதை நாம் நன்கு அறிய முடி​யும். பல ஆண்​டு​களாக திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு சுப்​ர​பாத சேவைக்கு முன், கோயில் திறந்​ததும் முதல் தரிசனம் யாதவ குலத்​தவர்​களுக்கு தான் வழங்​கப்​படு​கிறது. இதே போன்று இரவு நடை சாத்​தப்​படு​வதற்கு முன் ஏகாந்த சேவை​யின்போது, கடைசி​யாக நாவிதரின் நாதஸ்வர இசை இசைத்த பின்​னர் தான் பெரு​மாள் துயிலுறங்க செல்​கிறார். ஒவ்​வொரு செவ்​வாய் கிழமை​களி​லும் நடத்​தப்​படும் அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை​யில், குண்​டூரை சேர்ந்த…

Read More

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்​துள்ள ‘கந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் நாளை வெளி​யாகிறது. இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடந்​த​போது, ரிஷப் ஷெட்​டி, கன்​னடத்​தில் பேசி​னார். அப்​போது​தான் என் மனதில் இருப்​பதை வெளிப்​படை​யாகப் பேச முடி​யும் என்​றார். இதற்​குத் தெலுங்கு ரசிகர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்​து​கொண்டே அவர் பேசாமல் சென்​று​விட்​டார் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர். ஏற்​கெனவே பவன் கல்​யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளி​யீட்​டின் போது சில கன்னட அமைப்​பு​கள் பெங்​களூரில் எதிர்ப்​புத் தெரி​வித்​ததை​யும் ஒப்​பிட்​டு, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தைப் புறக்​கணிப்​போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை ​தளத்​தில் உரு​வாக்​கி​யுள்​ளனர். இது டிரெண்​டானது. இந்​நிலை​யில், மும்​பை​யில் நடந்த புரமோஷன் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்​டி​யிடம் இதுபற்றி கேட்​ட​போது, “பு​திய மொழிகளைக் கற்​றுக் கொள்​வதை உண்​மை​யிலேயே விரும்​பு​கிறேன். ஏனென்​றால் நாங்​கள் ஒரு இடத்​துக்​குச் செல்​லும்​போது அவர்​கள் மொழி​யில் பேசி​னால் அது மரி​யாதையைக் காட்​டு​கிறது. அதனால்​தான்…

Read More

மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. கரூரில் செப்.27-ல் தவெக தலைவர் விஜய் நடத்திய அரசியல் பேரணியில் 41 பேர் உயிரிழந்தனர். மயங்கி விழுந்து உயிரிழப்பு: கூட்டத்தில் பங்கேற்றோர் பலமணி நேரம் குடிநீர், உணவு இல்லாமல் வெயிலில் நின்றிருந்தது, காற்றோட்டம் இல்லாதது, உடலில் நீர் சத்து குறைந்தது போன்ற காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பலர் இறந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி…

Read More

கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டெட்டின் ஒரு புதிய ஆய்வில், மோசமான தூக்கம் மூளை வயதானதை துரிதப்படுத்துகிறது, மூளை அவர்களின் காலவரிசை வயதை விட பழையதாக தோன்றும். ஏழை ஸ்லீப்பர்களுக்கு ஒரு வயது இடைவெளியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இந்த இணைப்பின் 10% க்கும் அதிகமான வீக்கம் விளக்குகிறது. தூக்க பழக்கத்தை மேம்படுத்துவது விரைவான மூளை வயதான மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்கலாம். கூர்மையான மற்றும் ஆரோக்கியமான மூளையை பராமரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியமானது. ஆனால் உங்கள் மோசமான பழக்கவழக்கங்களில் ஒன்று உங்கள் மூளை ஆரோக்கியத்தை நாசப்படுத்தக்கூடும். இந்த பழக்கம் உங்கள் மூளை வயதை விரைவாகவும், முதுமை மறதி கூட ஏற்படுத்துகிறது.கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஒரு புதிய ஆய்வு நவீன சமுதாயத்தில் ஒரு பொதுவான பழக்கத்தை விரைவான மூளை வயதானதாக இணைத்துள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் எபியோமெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.ஒரு பொதுவான பழக்கம் மூளை வயதானதை துரிதப்படுத்துகிறதுமோசமாக தூங்கும் நபர்கள் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதால்,…

Read More