சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓரிரு நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிஸா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி களில் அக்.3-ம் தேதி வாக்கில் கரையை கடக்கும். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய…
Author: admin
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல்மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் நேற்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால்…
சென்னை: சென்னை, சேலம் கோட்டங்களுக்கு உட்பட்ட 20 ரயில் நிலையங்களில் ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்பது ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகும். இது இயந்திரவியல், மின்சாரவியல் தொடர்புடையது. ஒரு தடத்தின் வழியாக ரயிலை உள்ளே வரவழைக்கவோ, அனுப்பவோ தேவைப்படும் பாயின்ட்கள், ரயில் செல்வதற்கு ஏற்ப பூட்டப்பட்டு, ரயில்களை பாதுகாப்பாக அனுமதிக்கும் ‘சிக்னல்…
கரூர்: கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுசாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த விமல் மகனான ஒன்றரை வயது குழந்தையின் வீட்டில் இன்று (செப்.29-ம் தேதி) காலை அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கரூர் ஏமூர் புதூரை சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி (35), தரணிகா (14) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் அருணா ஜெகதீசன் விசாரணை…
சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும் அவர் சொன்னார். விஜய் வருவதற்காக நீண்ட நேரம் ஆனது. காலை 8 மணி முதலே காலை உணவு, மதிய உணவு, குடி தண்ணீர் இல்லாமல் காத்திருந்துள்ளனர். அதனால் ஒரு மயக்க நிலைக்கு வந்துள்ளனர். கூட்டத்திலிருந்து வெளியே செல்லலாம் என்றாலும், நெரிசலைக் கடந்து செல்ல முடியவில்லை என்று சொல்கின்றனர். அதுபோலத்தான் பலர் சிக்கிக்கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் கூட்டம் நடத்திய இடத்தில்தான் தவெக கூட்டத்துக்கு அனுமதி கொடுத்ததாகவும், விஜய் குறித்த நேரத்துக்கு…
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன். கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.…
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் முதன்மை அடையாளம் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளின் பல நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகளை பராமரிக்கும் நபர்கள் நோய்களிலிருந்து விரைவாக குணமடைவார்கள், அரிதாகவே நோய்வாய்ப்படுகிறார்கள். தொடர்ச்சியான தொண்டை, சைனஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டது. நோய்த்தொற்றுகளின் காலம் நீளமாகி, உங்கள் உடல் அவர்களுடன் சண்டையிடும்போது அவற்றின் தீவிரம் அதிகரிக்கிறது. உங்கள் உடல் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளிலிருந்து அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கிறது, இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது, எனவே நீங்கள் சரியான கவனிப்பைப் பெற வேண்டும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி சிக்கல்களைக் கையாள வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
சென்னை: தவெக பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு மக்களின் உணர்வாக மக்களின் சந்தேகங்களை பதிவு செய்திருந்தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுவதாக கூறியிருக்கும் முதல்வரின் போட்டோஷூட் வீடியோவே, தமிழகத்துக்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சி. காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் இவை எல்லாம் வதந்தியா? கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா, இதில் இன்னும் கொடுமையாக முதல்வர் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான அரசின் தவறுகளை மூடி…
கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறது அதிமுக. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. காரணம், பாஜக சகவாசம். இங்குள்ள சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் திமுக-வுக்கு கைகொடுப்பதால் கொங்கு மண்டலத்தில் இந்தத் தொகுதி திமுக கோட்டையாகவே இருக்கிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய வாக்குகள் உள்ளன. இது தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவீதமாகும். தேர்தலுக்குத் தேர்தல் அரவக்குறிச்சியின் அரசியல் தலையெழுத்தை எழுதுவதும் இந்த வாக்குகள் தான். 2011-ல், முன்னாள் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய பாஜக மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதனும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முன்னணியிலேயே இருந்து வந்த செந்தில்நாதன், பள்ளபட்டி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே பின்னடைவை நோக்கிப் பயணித்தார்.…
அதிமுக கூட்டணியில் இம்முறை தங்களுக்கு 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியையாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியை கேட்கவிருப்பதாக பாஜக-வினர் பேச ஆரம்பித்திருப்பது கோவை அதிமுக-வினர் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கோவை தெற்கை பாஜக-வும் மற்ற 9 தொகுதிகளை அதிமுக-வும் கடந்தமுறை கைப்பற்றின. அதேபோல் மக்களவைத் தேர்தலில் அதிமுக துணையின்றி போட்டியிட்ட பாஜக-வின் அண்ணாமலை, சுமார் நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளினார். அதிலும் குறிப்பாக, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக-வை விட பாஜக-வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்தன. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் இம்முறை தங்களுக்கு கோவையில் கூடுதலாக இன்னொரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என…
