புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் இந்தி நடிகர் சோனு சூட் உள்ளிட்டோரிடமும் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.…
Author: admin
Last Updated : 01 Oct, 2025 07:29 AM Published : 01 Oct 2025 07:29 AM Last Updated : 01 Oct 2025 07:29 AM பிரிஸ்பன்: இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹாகன் 246 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 92 ரன் கள் சேர்த்தார். பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 16.2 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட கிஷண் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 2-வது நாளான இன்று இந்தியா யு-19 தனது பேட்டிங்கை தொடங்குகிறது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
குவெட்டா: பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. அந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்டுள்ளது. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் தனி நாடுகளாக உதயமானபோது பலுசிஸ்தானும் தனி நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்தது. அப்போதுமுதல் பாகிஸ்தான் அரசுக்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலுசிஸ்தானின் அண்டை மாகாணமான கைபர் பக்துன்கவா பகுதி மக்களும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாகாணத்தின் மாட்ரே தாரா கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப் படை அண்மையில்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதே நாள் மாலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினர். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் வீதி உலாவுடன் பிரம்மோற்சவ விழாவின் வாகன சேவைகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்து பல்லக்கு வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், மோகினி அலங்காரம், கருட சேவை, அனுமன் வாகனம், தங்க ரத ஊர்வலம் மற்றும் கஜ வாகனம் என வரிசையாக கடந்த 6 நாட்களில் ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி 4 மாட வீதிகளில்…
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘வீர தமிழச்சி’. இதில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி இணைந்து தயாரித்துள்ளனர். இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சுரேஷ் பாரதி பேசும்போது, ‘‘கட்டிடத் தொழிலாளியாக ரூ.35 சம்பளத்தில் வேலை செய்த நான், இன்று இயக்குநராக உயர்ந்துள்ளேன். 2016-ம் ஆண்டு ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் குறும்படத்தை இயக்கினேன். அது சிறந்த விழிப்புணர்வு குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருது பெற்றேன். 18 குறும்படங்களை இயக்கியுள்ளேன். 36 விருதுகளை வென்றிருக்கிறேன். அதற்குப் பிறகு ஒரு கதையை…
கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். அதன்படி, ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வந்தனர். அவர்கள், வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர், எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவர்கள் கூறுவதைக் கேட்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…
சென்னை: இந்த ஆண்டு முதல், கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி,பிசிஏ, பி.காம், பிபிஏ, பிபிஎம் போன்றவை) சேருவதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பெண்களுக்கும் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவிபெறும், மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என…
ஷார்ஜா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி 20 (ஐஎல்டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கை வீரர் குஷால் மெண்டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். தினேஷ் கார்த்திக் 412, டி 20 ஆட்டங்களில் விளையாடி 7,437 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 35 அரை சதங்கள் அடங்கும் ஸ்டிரைக் ரேட் 136.66 ஆகும். ஹாக்கியில் இந்தியா வெற்றி: இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு கான்பெரா சில் அணிக்கு எதிராக இந்திய இளம் அணி நேற்று 4-வது ஆட்டத்தில் மோதியது. கான்பெரா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்…
திருமலை: மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரின் உச்சியில் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடைதான் அமைக்கப்படுகிறது. அதன் கீழ்தான் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கைங்கர்யங்களை உற்று நோக்கினால், ஜாதி, மதம் என்பது பெருமாளுக்கு கிடையாது என்பதை நாம் நன்கு அறிய முடியும். பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்கு முன், கோயில் திறந்ததும் முதல் தரிசனம் யாதவ குலத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது. இதே போன்று இரவு நடை சாத்தப்படுவதற்கு முன் ஏகாந்த சேவையின்போது, கடைசியாக நாவிதரின் நாதஸ்வர இசை இசைத்த பின்னர் தான் பெருமாள் துயிலுறங்க செல்கிறார். ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நடத்தப்படும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில், குண்டூரை சேர்ந்த…
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார். அப்போதுதான் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்றார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டே அவர் பேசாமல் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின் போது சில கன்னட அமைப்புகள் பெங்களூரில் எதிர்ப்புத் தெரிவித்ததையும் ஒப்பிட்டு, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை தளத்தில் உருவாக்கியுள்ளனர். இது டிரெண்டானது. இந்நிலையில், மும்பையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்டியிடம் இதுபற்றி கேட்டபோது, “புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வதை உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் ஒரு இடத்துக்குச் செல்லும்போது அவர்கள் மொழியில் பேசினால் அது மரியாதையைக் காட்டுகிறது. அதனால்தான்…
