Author: admin

உதய்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் யுவ மண்​டல் கமிட்டி தெரி​வித்​துள்​ளது. இந்த அலங்​காரத்​துக்கு கடந்த 3 ஆண்​டு​களாக பக்​தர்​களிட​மிருந்து நன்​கொடையை கோயில் நிர்​வாகம் பெற்று வந்​தது. முதலாண்டில் அம்​மனுக்கு ரூ.11,11,111 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும், 2-ம் ஆண்​டில் ரூ.21,21,121 மதிப்​புடைய நோட்டுகளால் அலங்​கார​மும், 3-ம், ஆண்​டில் ரூ.31,31,131 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும் நடை​பெற்​றது. தற்​போது 4-ம் ஆண்​டாக ரூ.51,51,151 மதிப்​புடைய நோட்​டு​களால் அம்​மனுக்கு அலங்​காரம் நடை​பெற்​றுள்​ளது. இதுதொடர்​​பான வீடியோ…

Read More

அகமதாபாத்: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. இந்த போட்​டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்​கிறது. ராஸ்​டன் சேஸ் தலை​மையி​லான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி) காலை தொடங்​கு​கிறது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது சொந்த மண்​ணில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நிலை​யில் இந்​திய டெஸ்ட் தொடரை அணுகு​கிறது. ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 3-வது டெஸ்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 27 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது மோச​மான சாதனையை படைத்​திருந்​தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்​தி​யத் தீவு​கள்…

Read More

சென்னை: ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். பாலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அதிபர் ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர்…

Read More

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி 20 கிரிக்​கெட் போடடி​யில் 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்​பற்றி சாதனை படைத்​தது. ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற 2-வது டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஆசிப் ஷேக் 47 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும் சந்​திப் ஜோரா 39 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​களும் விளாசினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். 174 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 17.1 ஓவர்​களில் 83 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேசன் ஹோல்​டர்…

Read More

ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார். ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்பட்டு வந்​தது. அப்​படிப்​பட்ட தீரம் மிகுந்த இந்​திய வீரர்​களுக்கு இங்கு அஞ்​சலி செலுத்​து​வது பெரு​மை​யாக உள்​ளது. இனி வரலாற்​றுப் பாடப்​புத்​தகங்​களில் எங்​களை விடு​வித்​தது பிரிட்​டிஷ்​காரர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள்​தான் என்​பதை மாற்றி அச்​சிட நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். முதலாம் உலகப்​போரின்​போது, ஈட்​டி, வாள் உள்​ளிட்ட ஆயுதம் ஏந்​திய இந்​திய குதிரைப்​படை பிரிவு​கள், கார்​மல் மலை​யின் பாறை சரிவு​களில் இருந்து ஒட்​டோ​மான் படைகளை விரட்டி அடித்​தது.…

Read More

ஹைதராபாத்: தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 7 கிலோ தங்கம், ரூ.5 கோடி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டனர். ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர். சமீபத்தில் அமலாபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ரூ.4.41 கோடி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். விசாகப்பட்டினம், குருபோம் மார்க்கெட் பகுதியில் 148 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோயில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள், 12 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.5 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். மேலும் 250 பெண்கள் மூலம் கோடி குங்குமார்ச்சனை நடத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Read More

தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிர​மாண்ட பாராட்டு விழா நடத்​தப்​படும் என கேரள அரசு அறி​வித்​துள்​ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்​துறை​யின் உயரிய விரு​தான தாதா சாகேப் பால்கே விருது செப்​.23-ம் தேதி வழங்​கப்​பட்​டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்​கும் வித​மாக கேரள அரசின் சார்​பில் அக். 4-ம் தேதி ‘மலை​யாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு விழா நடை​பெற இருக்​கிறது. இதைக் கேரள கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் சாஜி செரியன் தெரி​வித்​தார். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள சென்ட்​ரல் மைதானத்​தில் நடை​பெறும் இவ்​விழா​வில், கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் மற்​றும் முக்​கிய அமைச்​சர்​கள் பங்​கேற்​கின்​றனர். இந்த நிகழ்​வுக்​கான லோகோ வெளி​யிடப்​பட்​டுள்​ளது. “மலை​யாள சினி​மாவுக்கு நடிகர் மோகன் லால் கடந்த 50 ஆண்​டு​களாகச் சிறப்​பான பங்​களிப்​பைச் செய்​துள்​ளார்” என்று அமைச்​சர் சாஜி செரியன் கூறி​னார். இந்​நிகழ்​வில் மலை​யாள நடிகர், நடிகைகள், பாடகர்​கள், அரசி​யல் தலை​வர்​கள்…

Read More

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் (அக்​.1, 2) வரு​கின்​றன. எனவே இன்​றும், நாளை​யும் சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்​டு, சென்ட்​ரல் – அரக்​கோணம், சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்டி, சூலூர்​பேட்டை உள்​ளிட்ட மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் இயக்கப்படும்.

Read More

நம்மில் நிறைய பேர், ஒரு கட்டத்தில் நம் சிறுநீரை ஒரு சிறிய நுரையைப் பெறுவதைப் பார்க்கிறோம் – சிறுநீர் கழிப்பின் போது சிறுநீரில் நுரை குமிழ்கள் இருப்பது நுரை சிறுநீரை உருவாக்குகிறது. சிறுநீரில் நுரை இருப்பது இயல்பானதாக இருக்கும், ஆனால் இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் சாத்தியமான சுகாதார சிக்கல்களையும் குறிக்கலாம். எப்படி என்று பார்ப்போம் …நுரை சிறுநீரின் பொதுவான காரணங்கள்பலமான அல்லது வேகமான சிறுநீர் கழித்தல்கழிப்பறைக்குள் சிறுநீரின் விரைவான ஓட்டம், நுரை உற்பத்தி செய்யும் காற்று பைகளை உருவாக்குகிறது. ஒரு கொள்கலனில் வேகமான நீர் கொட்டுவதற்கான செயல்முறை நுரை உருவாக்கத்திற்கு ஒத்த விளைவை உருவாக்குகிறது. இந்த வகை நுரையின் தோற்றம் பொதுவாக எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளையும் குறிக்காமல் வேகமாக மறைந்துவிடும்.லேசான நீரிழப்புமக்கள் போதுமான தண்ணீரை உட்கொள்ளாதபோது உடல் செறிவூட்டப்பட்ட சிறுநீரை உற்பத்தி செய்கிறது. சிறுநீரில் கழிவுப்பொருட்களின் செறிவு அதிகரிக்கிறது, நீர் உள்ளடக்கம் குறையும் போது குமிழி உருவாவதற்கு வழிவகுக்கிறது. ஒரு…

Read More