சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் 17 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பெரம்பூர், சக்கர பாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா (17) மற்றும் துளசி (16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, கடந்த மாதம் 30ம் தேதி அன்று சிறுமிகள் இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்…
Author: admin
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக நீடித்த வன்முறையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது 12 பேர் கொல்லப்பட்டனர். டாடியாலில் தொடங்கி முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்…
சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ”நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர். நம் தேசப் பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க…
இந்த பாக்டீரியாக்கள் ஆபத்தானதாகத் தெரியவில்லை, ஆனால் அவை கடுமையான வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கைகள் கதவு கைப்பிடிகள், உணவு அல்லது ஹேண்ட்ஷேக் தொடர்புகள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடும்போது, கிருமிகள் வாய்க்குள் நுழையலாம். முடிவு? வயிற்றுப்போக்கு, பிடிப்புகள், குமட்டல் மற்றும் நீரிழப்பு. ஒவ்வொரு ஹேண்ட்ஷேக்கிற்கும் பிறகு, குறிப்பாக உணவுக்கு முன், இந்த பாக்டீரியாக்களை விலக்கி வைக்கிறது.
சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? . விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? . காவல்துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது. ஹஸ்கி வாய்ஸில் பேசினால்…
கொழுப்பு கல்லீரல் நோய், குறிப்பாக NAFLD, வளர்ந்து வரும் உலகளாவிய கவலையாகும், இது பெரும்பாலும் வாழ்க்கை முறை காரணிகளால் இயக்கப்படுகிறது. காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் பிரதீப் வேகாரியா மிதி எடிமா அல்லது வீங்கிய கால்களை எடுத்துக்காட்டுகிறார், கல்லீரல் பாதிப்பு குறித்த ஒரு முக்கியமான மற்றும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். நோயின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் ஒரு எளிய குழி சோதனை மூலம் முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். கல்லீரல் நோய்கள் உலகம் முழுவதும் பொதுவானதாகி வருகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) மிகவும் பொதுவான கல்லீரல் நோயாகும். அமெரிக்க பெரியவர்களில் சுமார் 24% பேர் NAFLD ஐக் கொண்டுள்ளனர், மேலும் 1.5% முதல் 6.5% வரை நாஷ் உள்ளது, அதன் கடுமையான வடிவம். கல்லீரல் நோயின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன என்றாலும், வாழ்க்கை முறை காரணிகள் ஒரு முக்கிய பங்கைக்…
கண்ணூர்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள யூதர்களும், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இரட்டை சகோதரர்கள் என அவர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். கண்ணூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், “இஸ்ரேலில் உள்ள யூதர்களும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டை சகோதரர்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பணிவான ஊழியர். ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்குகள் போட்டு கொண்டு வந்தபோது அல்லது விசா கட்டணங்களை அதிகரித்தபோது மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதே ஒரு சுயமரியாதை கொண்ட தேசமாக இருந்தால், ரத்தம் ஓடும். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களை நாம் கொண்டிருக்கிறோம்.” என்றார் முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன்…
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து நாளையும் (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு மொத்தம் 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வெள்ளிக்கிழமைக்கு பதிலாக மற்றொரு நாள் பணி நாளாக இருக்கும் என்று தெரிகிறது.
சமீபத்திய ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆய்வில், டிக்டோக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் 30-70 வயதுடைய அமெரிக்காவிடையே அதிகரித்த தனிமையுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது தொற்றுநோயால் அதிகரித்த ஒரு போக்கு. கண்டுபிடிப்புகளின் தொடர்பு தன்மை இருந்தபோதிலும், அடிக்கடி சமூக ஊடக பயன்பாடு தனிமையுடன் வலுவாக தொடர்புபடுத்துகிறது, அதன் குறிப்பிடத்தக்க பொது சுகாதார தாக்கங்களை வலியுறுத்துகிறது. அமெரிக்காவில் வயதுவந்த மக்கள்தொகையில் 50% தனிமையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் -19 க்கு முன்னர் அமெரிக்கர்கள் ஏற்கனவே தனிமையில் இருந்தனர், மேலும் தொற்றுநோய் போக்கை மோசமாக்கியுள்ளது. ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில், டிக்டோக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் இதே போன்ற தளங்கள் உலகளாவிய தனிமை தொற்றுநோய்க்கு எந்த மருந்தும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகரிப்பை மற்றவர்களிடையே தனிமையாக உணருவதற்கான அதிக வாய்ப்புடன் இணைத்தனர். ஆய்வின் கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழில்…
சென்னை: செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு சட்டவிரோதமானது. அவரின் கட்டுக்கடங்காத, மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல, தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை திராவிட மாடல் அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய இந்த படு பயங்கரமான 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், 6 கோடி தமிழக மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், சிபிஐ விசாரணையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முதல்வர் அறிவிக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிர் பலியான கோர சம்பவத்தின்…
