புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப் படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக…
Author: admin
பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் ஓடிடி, தொலைக்காட்சி, இசை என அனைத்து உரிமைகளும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. போயபட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. இதன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தை 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா உள்ளிட்ட பலர் பாலகிருஷ்ணா உடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப் பதிவாளராக ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் , எடிட்டராக…
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை சேவை பிரச்சார நிறைவு நாள் நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்ட மேலாளர்கள் தேஜ் பிரதாப் சிங், அங்கூர் சவுகான் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர், ரயில்களில் செல்லும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலமாகவும்,ரயில்களில் மற்ற பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர…
பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (82), தசரா விடுமுறைக்காக டெல்லியில் இருந்து கடந்த 29-ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். கடந்த 30-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘பேஸ்மேக்கர்’ கருவி: அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத் துடிப்பில் மாறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதால், அவர், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் அவரை…
ஜீவா நடித்துள்ள படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். அப்படத்துக்குப் பிறகு தமிழில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டு இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்து வருகிறார். இதில் பிரார்த்தனா, மீனாட்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்து வருகிறார். முழுக்க காமெடி கலந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் நிதிஷ் சஹாதேவ். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட முனைப்பு காட்டி வருகிறது படக்குழு. ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் தவிர்த்து, நான்கு படங்கள் தயாரித்து வருகிறார் கண்ணன் ரவி. இப்படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த…
பார்சிலோனா: என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தைம் தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. சர்வதேச பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் நோக்கம். உதாரணமாக, கொரிய படங்கள் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதேபோல், இந்திய படங்களுக்கும் அதே மாதிரியான வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பிரபலமாக உள்ளன…
சென்னை: மத்திய அரசு நிதி வழங்கியதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களில் தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுமுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக்கல்வித் துறை திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதில், ஆர்டிஇ திட்ட நிதியும் ரூ.600 கோடி வரை வழங்கப்படவில்லை.…
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ராமர் மேற்கொண்டுள்ளார். பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர்.இதன்காரணமாக, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகம் முழுவதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை. சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தன. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே…
மம்மூட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ (Patriot) எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்மூட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இதன் சிறிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் ஃபகத் பாசில், குஞ்சாகோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி – மோகன்லால் உடன் இணைந்து நடித்துள்ளார்கள். முழுக்க ஆக்ஷன் படமாக இது அமைந்திருப்பது டீஸர் மூலம் தெரியவருகிறது. இப்படத்தினை ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன், இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் ஆகியோர்…
