முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முதல் முறையாக தற்போதுதான், பாகிஸ்தான் அரசுக்கும்,ராணுவத்துக்கும் எதிராக கோஷமிட்டனர் நிலைமை மோசமடைந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200-க்கும்மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த…
Author: admin
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42…
தருமபுரி: அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். தருமபுரியில் நேற்று பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தராததுதான் காரணம். அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், கரூர் சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் கூற வேண்டும். தற்போது ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியுள்ளது. அவர்களின் விசாரணை முடிவை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது ஏன்? கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக-வுக்கு பல கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்…
புதுடெல்லி: குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள சர் கிரீக் கடல் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி செயல்பட்டால், பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்ளது. இது இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல் எல்லைப் போல் உள்ளது. இப்பகுதியின் எல்லைப் பிரச்சினை இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக உள்ளது. இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா பல முறை முயன்றது. ஆனால் பலன் இல்லை. இந்நிலையில் சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் விரிவுபடுத்துகிறது. இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் (பிஎஸ்எப்) தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியா பதிலடி கொடுப்பது நிச்சயம்.…
புதுடெல்லி: சோஹோ நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ செயலியை முழு வீச்சில் கொண்டு வர தீவிரமாக இருக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இலவசமானது, பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது. சோஹோவால் தொடங்கப்பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகிராம் போல் பயன்படுத்தலாம். இந்நிலையில், ‘அரட்டை’ செயலியின் குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி ஜான் முதல் முறையாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரட்டை செயலி 10 லட்சம் வாடிக்கையாளர்களை தாண்டி விட்டது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகள் விஷயத்தில் பயனாளிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த எண்ணத்தை நீடித்து நிலைக்க செய்வதற்காக எங்கள் குழு மும்முரமாக பணியாற்றிவருகிறது. குறிப்பாக தனியுரிமை, மதிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். உரையாடல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பொறுத்த வரையில் முழுமையான பாதுகாப்புதான் (எண்ட் டூ எண்ட்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர். இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம். இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வகத்தில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது. இதேபோல செயற்கை கல்லீரலையும் உருவாக்கி உள்ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருக்கிறோம். எங்களது ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறி யிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: நம் தேசப்பிதா காந்தியை கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவரே அஞ்சல்தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்கவேண்டும் என காந்தியின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு களுக்கும் மேலாக சுதந்திரக் கொடியை ஏற்றுக்கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சல்தலையும், ரூ.100 நினைவு நாணயத்தையும் வெளியிட்டிருப்பது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயலாகும். இழிவுபடுத்துவதற்கு சமம் காந்தியின் படுகொலைக்குக் காரணமான…
புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு (சிசிஇஏ) கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 57 கேந்திர வித்யாலயா பள்ளிகளை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 86,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் இதனால் 4,600-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உருவாகும். இதற்காக 9 ஆண்டுகளில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்கப்படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்பாட்டுச் செலவாகவும் இருக்கும்” என்றார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “57 புதிய கே.வி. பள்ளிகளை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு அடிப்படை நிலையில் கல்வி அளிக்கும் பால்வதிகாக்களை இது உள்ளடக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைவார்கள்,…
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்வு நடத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதனை தொடர்ந்து அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் தொடர்ந்து 9 நாட்கள் வரை வாகன சேவைகள் நடத்தப்பட்டன. மொத்தம் 16 வாகனங்கள், ஒரு தங்க ரத ஊர்வலம் மற்றொன்று மகா ரத புறப்பாடு, ஒரு தீர்த்தவாரி என கடந்த 9 நாட்களும் திருமலையே விழாக்கோலம் பூண்டிருந்தது. 28 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. காலையும், இரவும் மின்னொளியில்…
சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் கடந்த 1959-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது என்ற பெருமை கொண்டது காந்தி அருங்காட்சியகம். கடந்த 1921 செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மேலாடை அணியக்கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததை கண்டு மனம் வருந்திய அவர், ‘நாடு முழுமைக்கும் என்றைக்கு நம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ, அன்று வரை நானும் மேலாடை அணிவதில்லை’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ம் தேதி எடுத்தார். காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடை, மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்குத்தான் கொண்டு வரப்பட்டது. இத்தகைய…
