Author: admin

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். கடந்த 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் அரசு விழா​வாக‌ தசரா கொண்​டாடப்​படு​கிறது. 415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்​மனை, சாமுண்​டீஸ்​வரி கோயில், கிருஷ்ண​ராஜ​சாகர் அணை, ரயில் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டன‌. கடந்த 9 நாட்​களும் உணவு திரு​விழா, திரைப்பட திரு​விழா, கிராமிய விழா, மலர்க் கண்​காட்​சி, பொருட்​காட்​சி, இசைக் கச்​சேரி, இலக்​கிய விழா மற்​றும் கன்னட கலை பண்​பாட்டை பறை​சாற்​றும் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. தசரா திரு​விழா​வின் இறுதி…

Read More

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து அசத்தினார். இந்த தொடருக்காக தமிழ்நாடு அணி திண்டுக்கலில் உள்ள பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களது திறனை மெருகேற்றியிருந்தனர்.இந்த முகாமுக்கு திண்டுக்கல் கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிக்கட்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி மேற்கு வங்கத்துடன் மோதுகிறது.

Read More

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கை அடிப்படையில், எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என பல்வேறு வகையான பிரிவுகளின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீஸார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் சம்பவம்: இந்த நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41…

Read More

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன? கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவது ஏன்? திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு,…

Read More

சென்னை: விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்தனர். விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றிபெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பள்ளிகளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்ப்பது வழக்கம். அதன்படி விஜயதசமி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள், கோயில்களில் குழந்தைகளின் விரல் பிடித்து கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளிகளில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆசிரியர் மடியில் குழந்தையை அமர வைத்து ‘அ’ எழுத்து எழுத வைத்தனர். இதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்தனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழலையர் மற்றும் 1-ம் வகுப்பில் நேற்று சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் வரை புதிதாக சேர்ந்துள்ளதாகத் தகவல்…

Read More

சன்ஷைன் வைட்டமின் என அழைக்கப்படும் வைட்டமின் டி நம் உடல்களுக்கு மிகவும் முக்கியமானது. இது எலும்புகளைப் பாதுகாக்கிறது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த நாட்களில், அதிகப்படியான ஏசி, உட்புற நடவடிக்கைகள் மற்றும் மோசமான சூரிய ஒளியுடன், பலர் அவற்றின் வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருப்பதைக் காண்கின்றனர். அவ்வாறான நிலையில், வைட்டமின் டி ஊசி அல்லது டேப்லெட்களுடன் அவர்கள் கூடுதலாக இருக்க வேண்டும், வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் நிறுத்த வேண்டும். மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவை மீறுவது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வைட்டமின் டி அதிகப்படியான உட்கொள்வது ஆபத்தான மருத்துவ பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது, இதில் உயர்ந்த இரத்த கால்சியம் அளவு, சிறுநீரக சேதம் மற்றும் இதயம் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை அடங்கும். வைட்டமின் டி உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டிய நபர்களை அடையாளம் காண வேண்டிய மக்கள்தொகை…

Read More

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் பாராட்​டத்​தக்க வகை​யில் பணி​யாற்​றியதற்​காக விழுப்​புரம் மண்​டலம், மத்​திய நுண்​ணறி​வு பிரிவு காவல் ஆய்​வாளர் ப.நட​ராஜன், விழுப்​புரம் மாவட்​டம், ஆரோ​வில் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் மா.சத்​யாநந்​தன், கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சு.மணி​கண்​டன், கடலூர் மாவட்​டம், புத்​தூர் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் க.நட​ராஜன் மற்​றும் சேலம் மாவட்​டம், மத்​திய நுண்​ணறி​வுப் பிரிவு தலை​மைக் காவலர் வா.பெ.கண்​ணன் ஆகிய 5 பேருக்கு 2025-ம் ஆண்​டுக்​கான ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது வழங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​விருது, முதல்​வ​ரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்​தன்று வழங்​கப்​படும். இவ்​விருதுடன், பரிசுத் தொகை​யாக ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.40 ஆயிரம் வழங்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்ளது.

Read More

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா இடையே நேற்று இரவு கரையை கடந்​தது. இதன் தாக்​கம் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, சேலம் மாவட்​டங்​களி​லும்.நாளை திரு​வள்​ளூர், சென்​னை,செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்பேட்​டை, வேலூர் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களி​லும், வரும் 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்​கை, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை…

Read More

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப் படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக…

Read More

பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் ஓடிடி, தொலைக்காட்சி, இசை என அனைத்து உரிமைகளும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. போயபட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. இதன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தை 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா உள்ளிட்ட பலர் பாலகிருஷ்ணா உடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப் பதிவாளராக ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் , எடிட்டராக…

Read More