போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணித்துள்ளனர். சம்பல் நதியின் மீது உள்ள பாலத்தின் மீது டிராக்டர் நிறுத்தப்பட்டது. அப்போது 12 வயது சிறுவன் திடீரென இன்ஜினை ஆன் செய்ததால் வாகனம் திடீரென முன்னேறி சம்பல் நதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் 12 சிறுவர்கள் தண்ணீரில் விழுந்த நிலையில், 11 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரை காணவில்லை. காணாமல் போன சிறுவனை போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுபோல காந்த்வா மாவட்டம், பந்தனா நகருக்கு…
Author: admin
சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எரிசக்தி பொருட்கள் மீதான விலையை உயர்த்தும். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், இதனால் அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகும். எனது இந்திய பயணத் திட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொடுங்கையூர் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதை பயோமைனிங் முறையில் ரூ.641 கோடியில் பிரித்தெடுத்து அகற்றும் பணிகள், 6 தொகுப்புகளாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 லட்சம் டன் ஆகும். அதில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தொகுப்பு 1 மற்றும் 2-ன் வாயிலாக சுமார்…
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்க புதிய தடுப்பூசி வழிகாட்டுதல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) நிறுவியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், கோவ் -19 தடுப்பூசிகள் மற்றும் முழுமையான குழந்தை பருவ தடுப்பூசி அட்டவணைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும்போது அவற்றை எப்போது வழங்க வேண்டும் என்பதை வழிகாட்டுதல்கள் தீர்மானிக்கின்றன. பார்ப்போம் …புதிய கோவ் -19 தடுப்பூசி வழிகாட்டுதல்கள் இரண்டு குறிப்பிட்ட குழுக்களுக்கு பொருந்தும்சி.டி.சி புதிய கோவ் -19 தடுப்பூசி நெறிமுறைகளை நிறுவியது, இது எந்தவொரு கோவ் -19 தடுப்பூசிகளையும் பெறாதவர்களைப் பாதுகாக்கும், மேலும் முந்தைய அளவுகளைப் பெற்றவர்கள் 2024-2025 மாடர்னா அல்லது ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசியை கடைசி தடுப்பூசிக்கு குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகு பெற வேண்டும். சி.டி.சி மாடர்னா மற்றும் ஃபைசர்-பயோன்டெக் மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு பரிந்துரைக்கிறது, குறிப்பிட்ட அளவு தேவைகள் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள்…
புதுடெல்லி: ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியா உலகத்துக்கு ஏராளமான விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், இந்திய அமைப்பில் சில பிழைகள் உள்ளன. அதனை எதிர்கொள்வதில் இந்தியா சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. ஆனால் தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என்றார். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா…
சிவகாசி: கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பட்டாசால் ஏற்படும் காற்று மாசுபாட்டைவிட நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவைதான் அதிக மாசு ஏற்படுத்தும். பெரிய முதலாளிகளை விட்டு விட்டு, சிவகாசி போன்ற சிறிய ஊரில் இருக்கும் சிறு முதலாளிகளின் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும். அனைத்துக்குமே காரணம் அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாஜக எம்.பி.க்கள் குழு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதைவிட, திமுக அரசை குறை கூறுவதில்தான் மும்முரமாக உள்ளனர். கரூர் சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவோர், மணிப்பூர் கலவரத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என கூறவில்லை. இதே நீதிபதி ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…
புதுடெல்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் இருக்கும் ஊழியர்களுக்கு சிறிய அளவிலான இழப்பீடு மட்டுமே கிடைக்கும். 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும். அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 24 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், புதிய…
அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் வேகக்கூட்டணி கடும் அழுத்தம் கொடுத்தது. தொடக்க வீரரான டேக்நரைன் சந்தர்பால் 11 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்பல் 8 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பிரண்டன் கிங் 13 ரன்களில் சிராஜின் அற்புதமான இன் ஸ்விங் பந்தில் போல்டானார்.…
முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முதல் முறையாக தற்போதுதான், பாகிஸ்தான் அரசுக்கும்,ராணுவத்துக்கும் எதிராக கோஷமிட்டனர் நிலைமை மோசமடைந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200-க்கும்மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த…
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42…
