Author: admin

Last Updated : 05 Oct, 2025 10:44 PM Published : 05 Oct 2025 10:44 PM Last Updated : 05 Oct 2025 10:44 PM கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே…

Read More

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர்…

Read More

இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை பார்த்து வருகிறது. ஒரு பொதுவான சடங்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலப்பது. இது ஒரு சிகிச்சை அல்ல, ஆய்வுகள் இது இரத்த சர்க்கரை சமநிலை, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நுட்பமான வழிகளில் ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இந்த எளிய இரவு நேர பழக்கத்தை சிலர் தேர்வு செய்வதற்கான ஆறு ஆராய்ச்சி ஆதரவு காரணங்கள் இங்கே.

Read More

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதில் மாற்​றுத்​திற​னாளி​கள் மேற்​கொள்​ளும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களின் தகு​திக்கு ஏற்ற பதவி​கள் என்ன என்ற விவரங்​களை​யும் தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. அதாவது மாற்​றுத்​திற​னாளி​களுக்கு ஏற்ற 119 பணி​களை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரி​வில், 119 பதவி​களும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடை​யில், மாற்​றுத் திற​னாளி​கள் நலச்​சங்​கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்​டது. தற்​போது, 119 இடங்​களே மாற்​றுத் திற​னாளி​கள் செய்ய ஏற்ற பணி​களாக சரி​பா​தி​யாக குறைத்து திமுக அரசு…

Read More

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்​து, சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதிவு: முதல்​வரின் சொந்​தத் தொகு​தி​யான சென்னை கொளத்​தூர் சட்​டபேர​வைத் தொகுதி திருப்​பதி நகர் முதல் பிர​தான சாலை​யில் உள்ள கழி​வுநீர் கால்​வாயை சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த தூய்​மைப் பணி ஒப்​பந்த ஊழியர் குப்​பன், விஷ​வாயு தாக்கி உயி​ரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யளிக்​கிறது. மேலும், உடனிருந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் சங்​கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்​கள். திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூரில் மூன்று தூய்​மைப் பணி​யாளர்​கள் உயிரைப் பறி​கொடுத்து 10 நாட்​கள் கூட ஆகவில்​லை. தற்​போது முதல்​வரின் சொந்​தத் தொகு​தி​யில் மீண்​டும் ஒரு உயிரைப் பறி​கொடுத்​திருக்​கிறோம். நாட்​டிலேயே தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு தமிழகத்​தில் தான் அதி​க​மாக…

Read More

சென்னை: ​தி​முக​வின் ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ எனும் பிரச்​சார வாசகத்தை விமர்​சித்து எந்த சண்​டை​யும் இல்​லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். வள்​ளலாரின் 202-வது பிறந்​த​நாள் விழாவை முன்​னிட்டு ஆளுநர் மாளி​கை​யில் 2 நாட்​கள் சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டுவரு​கின்​றன. அதன்​படி நேற்று நடை​பெற்ற விழா​வில் பேசிய ஆளுநர் ஆர்​.என்​.ரவி ‘திரு​வருட்​பா-ஆறாம் திரு​முறை’ எனும் நூலின் இந்​திப்பதிப்பை வெளி​யிட்​டார். தொடர்ந்து மாணவர்​களால் காட்​சிப்​படுத்​தப்​பட்ட வள்​ளலார் சன்​மார்க்க கண்​காட்​சி​யை​யும் பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய உலகில் இருக்​கும் பிரி​வினை​வாதம், வறுமை ஆகியவற்றை போக்​கும் வழிகள் வள்​ளலாரின் தத்​து​வங்​களுக்கு உள்​ளன. வள்​ளலாருக்கு தரவேண்​டிய மரி​யாதை இன்​னும் கிடைக்​காதது வருத்​த​மாக இருந்​தது. அதனால்​தான் 2023-ம் ஆண்டு முதல் ஆண்​டு​தோறும் வள்​ளலார் விழாவை நடத்தி வரு​கிறேன். வள்​ளலாரை தின​மும் வணங்க வேண்​டும் என்​ப​தற்​காகவே வள்​ளலார் சிலை​யை​ ராஜ்பவனில் அமைத்​தேன். அத்​தி​யா​வசிய தேவைகளுக்​காக மட்​டுமின்றி மரங்களைவெட்​டு​வ​தா​லும், காடுகளை அழிப்​ப​தா​லும் பரு​வநிலை…

Read More

சென்னை: ஸ்​பெ​யினில் நடை​பெற்ற கார் பந்​த​யத்​தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்​கு​மார் அணிக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்​டூரன்ஸ் சாம்​பியன்​ஷிப் தொடர் கார் பந்​த​யத்​தில் அஜித் அணி ஒட்​டுமொத்​த​மாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்​துள்​ளது. இதையொட்​டி, அவருக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் தனது சமூக வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பார்​சிலோ​னா​வில் நடந்த 24 மணி நேர கார் பந்​த​யத்​தில் நடிகர் அஜித்​கு​மாரின் அணி ஒட்​டுமொத்​த​மாக 3-வது இடம் பிடித்​திருப்​பதை அறிந்து மகிழ்​கிறேன். இந்த வெற்​றி​யின் மூலம் உலக அளவில் கார் பந்​த​யத்​தில் இந்​தி​யா​வை​யும், தமிழகத்​தை​யும் பெரு​மையடைய செய்த நடிகர் அஜித்​கு​மாருக்​கும், அவரது குழு​வினருக்​கும் வாழ்த்​துகள். மேலும், இந்த சர்​வ​தேசப் போட்​டி​யின்​போது, கார், பந்தய உபகரணங்​கள், ஜெர்​சி​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் இலச்​சினையை பயன்​படுத்​தி​யதற்​காக தமிழக அரசு சார்​பில் அவருக்​கும், அவரது குழு​வினருக்​கும் நன்​றியை…

Read More

புதுடெல்லி: ​பாஸ்​டேக் இல்​லாதவர்கள் யுபிஐ பயன்படுத்தினால், வழக்​க​மான கட்​ட​ணத்​தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என்று மத்​திய சாலைப்​போக்​கு​வரத்து, நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகள், விரைவுச் சாலைகளில் உள்ள 1,150 சுங்​கச்​சாவடிகளில் தடை​யின்றி பயணிக்க ஏது​வாக பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் வசதியை இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (என்​எச்​ஏஐ) கடந்த சுதந்​திர தினத்​தின்போது அறி​முகப்​படுத்​தி​யது. அன்​றைய தினம் மட்​டும் 1.40 லட்​சம் வாகன ஓட்​டிகள் இந்த வரு​டாந்​திர பாஸை வாங்​கினர். இதையடுத்து, வரு​டாந்​திர பாஸ் திட்​டத்​துக்கு வாகன ஓட்​டிகளிடம் நல்ல வரவேற்பு காணப்​பட்டது. இந்த நிலை​யில், பாஸ்​டேக் இல்​லாத வாக​னங்​கள் நவம்​பர் மாதம் முதல் 1.25 மடங்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. உதா​ரணத்​துக்கு, பாஸ்​டேக் வைத்​திருக்​கும் ஒரு​வர் ரூ.100 சுங்க கட்​ட​ணம் செலுத்​து​வார் என்றால், அவர் ரொக்​க​மாக செலுத்​தும்​போது ரூ.200 கட்​ட​ணத்தை செலுத்த வேண்​டி​யிருக்​கும். அதே​நேரம், யுபிஐ வசதியை பயன்​படுத்​தி​னால் ரூ.125…

Read More

கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று (அக்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துரை.செந்தமிழ்செல்வன், பொறுப்பேற்கும் நிகழ்வையொட்டி, காந்திபுரத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று (அக்.5) நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “செந்தமிழ்செல்வன் முறைப்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பளாராக பொறுப்பை ஏற்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கரூரில் நடந்த தவெக பிரச்சார விவகாரம் தொடர்பாக முன்னரே விரிவாக பேசி விட்டேன். இனி, விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த பிறகு…

Read More

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கியுள்ளது. தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் இன்று (அக்.5) முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருவராக விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத்,…

Read More