ஏபிசி ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் உள்ளிட்ட மூன்று முக்கிய பொருட்களை கலப்பதன் மூலம் தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் ஆரோக்கியமான பானமாகும். சுகாதார ஆர்வலர்களிடையே பிரபலமடையக்கூடிய அதன் அமைப்பின் எளிமை இருந்தபோதிலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் வலுவானவை. ஒவ்வொன்றும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஏற்றப்படுகின்றன, பீட்ரொட்டுகள் நைட்ரேட்டுகள் மற்றும் இரும்பு, கேரட் உணவு நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தவை. ஒன்றாக, அவை சுவையாக சுவைக்கும் ஒரு சாற்றை உருவாக்குகின்றன, மேலும் இது உடலுக்கு ஊட்டச்சத்துக்களின் ஊக்கமாகும்.எங்கள் அன்றாட வழக்கத்தில் ஏபிசி சாற்றைச் சேர்க்க ஐந்து காரணங்கள் இங்கே:(கேன்வா)
Author: admin
புதுடெல்லி: மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவை மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்தி மையமாக மாற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது, ஒரு கட்டுக்கதை திட்டமாக மாறிவிட்டது. மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கு அடிப்படையிலிருந்து மாற்றம் தேவை. இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? . மேக் இன் இந்தியா திட்டம் என்பது அந்த உதிரிபாகங்களை வெறுமனே ஒன்று சேர்க்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. மாறாக அந்த திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்கவில்லை. ஐபோன் முதல் டிவி வரை: ஐபோன்கள் முதல் டிவி வரை அதற்கான பாகங்கள்…
நாகப்பட்டினம்: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நாகை அவுரித் திடலில் நேற்று மாலை பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: திமுக ஆட்சியில் எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவரது குடும்பத்தினர் பற்றித்தான் கவலைப்படுகிறார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன அதிகாரம் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் அவரிடம் உள்ளது. இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கட்டும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக பொன்விளையும் பூமியை தாரை வார்க்க முயன்றார்கள். அப்போது அதிமுக அரசு, மத்திய அரசுடன் பேசி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் டிசிபி ஷாலினி தீட்சித் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து 10 வயதில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கலாம் முதலில் மும்பைக்கு வந்து இருபது ஆண்டுகளாக நேஹா என்ற பெயரில் திருநங்கை அடையாளத்தில் அங்கே தங்கியுள்ளார். அங்கு இவர், ஹிஸ்ரா சமூகத்தின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பிறகு போபாலின் புத்வாரா பகுதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்துள்ளார். உள்ளூர் முகவர்களின் உதவியுடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அவர் பெற்றுள்ளார். போலி அடையாளத்தின் கீழ் வாழ்ந்தது மட்டுமல்லாமல், போலியான இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் நேஹா பயணம் மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அடையாளத்தை மறைப்பதற்காக திருநங்கை போல…
புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார். சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின் காலித் பின் தலால். பிரிட்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்த அல்வாலீத், கடந்த 2005-ம் ஆண்டு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ரியாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோமாவிலிருந்து மீளாததால் உறங்கும் இளவரசர் என அவர் அழைக்கப்பட்டார். அவ்வப்போது சிறிய அளவில் அவருடைய உடல் பாகங்கள் செயல்பட்டன. அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் அல்வாலீத்துக்கு சுயநினைவு திரும்பவில்லை. தனது மகனின் உயிரைக் காப்பாற்ற காலித் பின் தலால் எவ்வளவோ முயற்சி செய்தார். செயற்கை சுவாசத்தை அகற்ற…
மயிலாடுதுறை: அரசு வாகனம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். இவர், தான் நேர்மையாகப் பணியாற்றியதால், தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். மேலும், எஸ்.பி.உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் புகார் தெரிவித்திருந்தார். காவல் துறை நடத்தை விதிகளை மீறியதால், இவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு மத்தியமண்டல ஐ.ஜி.க்கு, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைகூறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாலும், பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாலும் அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முன் அனுமதியின்றி மயிலாடுதுறையை விட்டு வெளியூர்களுக்கு செல்லக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக,…
புதுடெல்லி: “அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம் ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் குறைந்த செலவில் எளிதாக, உடனடியாக, பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது. யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை ரொக்க பணம் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையில் இருந்து மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு தள்ளியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய அங்கமாக யுபிஐ மாறியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும்…
திருவாரூர்: 2019 மக்களவைத் தேர்தலின்போது திமுகவிடம் தேர்தல் செலவுக்காக மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியது. அதில் ஒரு சிங்கிள் டீ கூட கட்சித் தொண்டர் குடிக்கவில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினரை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். மோடியும், அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வரும் அவர், கம்யூனிஸ்ட்கள் எதற்காகவும் போராடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதிக்கும் விஷயங்களை மேற்கொண்டால், உடனடியாக அதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே, கம்யூனிஸ்ட்களுக்கு சொல்லித் தரக்கூடிய இடத்தில் அவர் இல்லை. அவர் சொல்லி, கேட்கக்கூடிய இடத்திலும் நாங்கள் இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தமிழகத்தில் எத்தனை போராட்டங்களை அவர் நடத்தியுள்ளார்.…
சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ரயில்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குடிநீர், உணவு, சிற்றுண்டி, குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை, விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் இனி கட்டாயம் க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்க வேண்டும். அதில், ஊழியர் பெயர், ஆதார் எண், ஒப்பந்ததாரர் பெயர், செல்லத்தக்க தேதி, காவல் துறை சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட அடிப்படை விவரங்களுடன் ரயில் நிலைய மேலாளர் அல்லது ஐஆர்சிடிசி அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்க வேண்டும். அடையாள அட்டை இன்றி பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் இருந்து விலகுவோர் தாங்கள் பெற்ற உரிமத்துடன் அடையாள அட்டையை சரண்டர் செய்ய வேண்டும்.…
சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல். தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பிறந்த தேதியை திருத்துவதற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை நீக்க பதிவேடு ஆகியவற்றை இணைக்க வேண்டும். திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை தங்கள் அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்…
