Author: admin

நாமக்கல்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேஜகூ முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி என்​ப​தில் குழப்​பமில்லை என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார். மறைந்த மூத்த தலை​வர் ஆடிட்​டர் ரமேஷின் 12-ம் ஆண்டு நினை​வேந்​தல் நிகழ்ச்சி நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அண்​ணா​மலை பேசும்​போது, “ஆடிட்​டர் ரமேஷ் கொலை வழக்கு விசா​ரணையை அமித்ஷா உள்​ளிட்​டோர் உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். விரை​வில் நீதி கிடைக்​கும்” என்​றார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்தில் விசைத்​தறி தொழிலா​ளர்​களை ஏமாற்​றி, கிட்னி மோசடிசெய்த சம்​பவத்​தில் திமுக நிர்​வாகி​கள் ஈடு​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. தமிழக அரசு சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​து, மோசடி​யில் ஈடு​பட்​ட​வர்​களைக் கண்​டறிந்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். மயி​லாடு​துறை​யில் பிரஸ்​மீட் நடத்​தும் அளவுக்கு டிஎஸ்பி சென்​றுள்​ளார். காவல் துறை​யின் அத்​து​மீறல்​களே இதற்கு காரணம். இதுகுறித்து விசா​ரிக்​காமல், அவரை சஸ்​பெண்ட் செய்​வது நியாயமல்ல. தமிழக அரசு நிர்​வாகம் சீர்​குலைந்​துள்​ளதையே இச்​சம்​பவம்…

Read More

இந்த 15 வைத்தியங்களுடன் குறட்டை நிறுத்துங்கள் குறட்டை பின்னணி இரைச்சல் அல்ல. இது ஆழ்ந்த தூக்கத்தை உடைக்கிறது, கூட்டாளர்களை எரிச்சலூட்டுகிறது, சில சமயங்களில் பெரிய சிக்கலைக் குறிக்கக்கூடிய தடுக்கப்பட்ட காற்றுப்பாதைகளைக் குறிக்கிறது. ஓவர்-தி-கவுண்டர் கேஜெட்களின் நீண்ட பட்டியல் நிவாரணத்திற்கு உறுதியளிக்கிறது, ஆனால் பெரும்பாலான மக்கள் அடிப்படை பழக்க மாற்றங்களுடன் ஒரு சாதனத்தை இணைத்த பின்னரே முன்னேற்றத்தைக் காண்கிறார்கள். சமீபத்திய ஹெல்த்லைன் மதிப்புரைகள் மற்றும் மருத்துவ ஸ்லீப்-மெடிசின் குறிப்புகளை வரைந்து, கீழே உள்ள வழிகாட்டி நடைமுறை, குறைந்த-ஆபத்து படிகள் வழியாக நீங்கள் இன்றிரவு முயற்சி செய்யலாம், மேலும் வீட்டு மாற்றங்கள் குறைந்துவிட்டால் மருத்துவருடன் விவாதிக்க வேண்டிய மருத்துவ விருப்பங்கள். இதை ஒரு ஏணியாக நினைத்துப் பாருங்கள்: எளிதான வளையத்துடன் தொடங்குங்கள், சிக்கல் சுற்றி வந்தால் மட்டுமே மேலே செல்லுங்கள்.மக்கள் ஏன் குறட்டை விடுகிறார்கள் முதல் இடத்தில்காற்று நுரையீரலுக்கு செல்லும் வழியில் கடந்த தளர்வான தொண்டை திசுக்களை கசக்கிவிட வேண்டும். தசைகள் அதிகமாக மந்தமாக…

Read More

அதிமுக ஆட்சியில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் இருந்தவர் சேலம் ஆர்.இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக சித்தரிக்கப்படும் இவர் மீது திமுக-வுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தச் சூழலில், 2026-ல் இளங்கோவன் தான் போட்டியிடுவதற்கான தொகுதியை தயார்படுத்தி வருவதாக சேலம் அதிமுக வட்டாரத்தில் பலமான பேச்சு கிளம்பி இருக்கிறது. 2011 தொடங்கி கடந்த மூன்று தேர்​தல்​களாக சேலம் மாவட்​டத்​தில் அதி​முக கூட்​டணி தான் பெரு​வாரி​யான வெற்​றிகளை குவித்து வரு​கிறது. கடந்த முறை, மொத்​தம் உள்ள 11 தொகு​தி​களில் ஒரே ஒரு தொகு​தி​யில் மட்​டுமே திமுக வென்​றது. எஞ்​சிய 10 தொகு​தி​களை அதி​முக கைப்​பற்​றியதற்கு முழு​முதற் காரணம் எடப்​பாடி பழனி​சாமி​யும் சேலம் இளங்​கோவனும் தான். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு இபிஎஸ் முதல்​வ​ரான போது அதன் பின்​னணி​யில் இருந்து அனைத்து ‘செட்​டில்​மென்ட்​’களை​யும் கவனித்​துக் கொண்​ட​வர் இளங்​கோவன் தான். அதற்கு கைம்​மாறாக, தன்​னிடம் இருந்த சேலம் புறநகர்…

Read More

டாக்கா: பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகியிருந்தனர். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அகமது – 3, முஸ்தாபிசுர் ரஹ்மான் – 2 மற்றும் மெஹதி ஹசன் – 1 விக்கெட் வீழ்த்தினர். 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை வங்கதேசம்…

Read More

சென்னை: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது அவர் தெரிவித்தது, “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல” என கூறினார். அப்போது ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது: “பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஏமாற்றுகின்ற கட்சி அல்ல; ஏமாறும் கட்சியும் அல்ல. எந்த கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என விரும்புவது இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இதற்கு மேல் நான் பேசுவது…

Read More

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார் ‘சயாரா’ இயக்குநர் மோகித் சூரி. இந்தியில் மோகித் சூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சயாரா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அலியா பட், மகேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார் மோகித் சூரி. இது தொடர்பாக பேட்டியொன்றில், ‘அனிமல்’ படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் சந்தீப்புக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தாக கூறியிருக்கிறார் மோகித் சூரி. ஆனால், அப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்ததால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோருவதாக மோகித் சூரி கூறியிருக்கிறார். ஒரு கதையை சந்தீப் ரெட்டி வாங்கா அணுகும் விதம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், ‘அனிமல்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது உழைப்பு தெரிந்தது என்று மோகித் சூரி தெரிவித்துள்ளார். அவரது…

Read More

மலேசியாவில் பேரா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் சிவனேசன் சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு நேற்று வருகை தந்தார். முன்னதாக, அவரை மல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மல்லை தமிழச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மல்லை சத்யா தலைமையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி முன்னிலையில், தமிழக கலாச்சரப்படி பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மலேசியா நாட்டின் பேரா மாநில அமைச்சர் சிவனேசன் சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார். அவருடன், மல்லை தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட செயலாளர் கனல் விழி, திருக்கழுகுன்றம் விசிக ஒன்றிய செயலாளர் அன்பு, விசி க நகர செயலாளர் ஐயப்பன், பிரபல சமூக ஆர்வலர்கள் குங்பூ…

Read More

திருத்துறைப்பூண்டி: ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பேசியது: “அதிமுக வெற்றி பெற்றால் பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்கள் என்று முதல்வ்ர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நாங்கள் துடிக்கவில்லை. நீங்கள் கூட்டணி வைக்கும்போது பாஜக நல்ல கட்சி. அதே நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா? அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஜால்ரா தட்டுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவுடன் கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனர். பிறகு…

Read More

நாகை: “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணியை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே அறிவித்த பூதங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் வாஞ்சூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் கூறியதற்குதான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவ்வாறு பதில் அளித்துள்ளார். அதில் எந்தவித…

Read More