Author: admin

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 21) சில இடங்களிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய,…

Read More

சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங் களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார நுகர்வோர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றப்பட்ட விதி களை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உத்தரவிட்டது. தமிழகத்தில் வீடுகள், குடிசை போன்ற பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வணிக இணைப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. உச்ச நேர கட்டணம்: தமிழகத்தில் தினமும் காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு இருக்கிறது. இதனால் தொழிற்சாலை போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, பீக் ஹவர் சார்ஜ் எனப்படும், உச்ச நேர கட்டணம்…

Read More

ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கும். அவை தீர்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன, மேலும் சலித்த மாலைக்கான சரியான செய்முறையாக இருக்கலாம்! ஒரு ஆப்டிகல் மாயை உண்மையில் ஒரு காட்சி நிகழ்வு, அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.எருமையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?முதல் பார்வையில், இது ஒரு வறண்ட மற்றும் வறண்ட பகுதியில்,…

Read More

பாலக்காடு: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மலம்புழா, மங்களம், சிறுவாணி, மீன்காரா உள்ளிட்ட அணைகள் நிரம்பும் நிலையில் இருப்பதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா, காசர்கோடு மாவட்டங்களில் உள்ள மணிமாலா, மோக்ரல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய…

Read More

நாகர்கோவில்: ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆண்​டு​தோறும் கன்​னி​யாகுமரி விவே​கானந்த கேந்​தி​ரா​வில் ஆர்​எஸ்​எஸ் மற்​றும் விவே​கானந்த கேந்​திர நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம். இந்த ஆண்டு 4 நாட்​கள் சுற்​றுப் பயண​மாக நேற்று முன்​தினம் மாலை கன்​னி​யாகுமரி வந்​தார். விவே​கானந்தா கேந்​தி​ரா​வில் தங்​கி​யிருக்​கும் அவர், விவே​கானந்தா கேந்​திரா நிர்​வாகி​கள் மற்​றும் ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் நேற்று ஆலோசனை நடத்​தி​னார். இன்று காலை கன்​னி​யாகுமரி பகவதி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்து விட்​டு, விவே​கானந்​தர் நினைவு மண்​டபத்​துக்கு செல்​கிறார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் முக்​கிய தலை​வர்​களு​டன் அவர் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். நாளை காலை டெல்லி புறப்பட்​டு செல்​கிறார். மோகன் பாகவத் வரு​கையை முன்​னிட்​டு, கன்​னி​யாகுமரி​யில் எஸ்​.பி. ஸ்டா​லின் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

Read More

புதுடெல்லி: பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி பிரிட்டன் செல்கிறார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அழைப்பை ஏற்று பயணம் மேற்கொள்ளும் மோடி, அங்கு 23, 24-ம் தேதிகளில் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார். இரு நாட்டு உறவுகள் குறித்து பிரதமர் ஸ்டார்மெருடன் பேசுகிறார். அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, புதுமை திட்டங்கள். கல்வி உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பிரிட்டன் மன்னர் சார்லஸையும் மோடி சந்திக்க உள்ளார். கடந்த 2018 முதல், பிரதமர் மோடி பிரிட்டன் செல்வது இது 4-வது முறை. பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு,…

Read More

Last Updated : 20 Jul, 2025 08:00 AM Published : 20 Jul 2025 08:00 AM Last Updated : 20 Jul 2025 08:00 AM சென்னை: பாமக செய்தி தொடர்​பாளர் வழக்​கறிஞர் க.பாலு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: உச்ச நீதி​மன்​றம் ஆணை​யிட்டு 1,200 நாட்​களுக்கு மேலாகி​ யும் உள்இடஒதுக்​கீடு வழங்க திமுக அரசு மறுக்​கிறது. எனவே, திமுக அரசைக் கண்​டித்​தும், உடனடி​யாக வன்​னியர் உள் இடஒதுக்​கீட்​டுச் சட்​டத்தை நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும் ஜூலை 20-ம் தேதி (இன்​று) காலை 11 மணிக்கு விழுப்​புரம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் உள்ள நகராட்​சித் திடலில் மாபெரும் மக்​கள் திரள் போராட்​டம் நடை​பெற உள்​ளது. பாமக தலை​வர் அன்​புமணி, போராட்​டத்​துக்கு தலைமை வகித்து உரை​யாற்​றுகிறார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், தேசிய விளையாட்டு நிர்வாகம், புதிய வருமான வரி, இந்திய துறைமுகங்கள். வணிக கப்பல் போக்குவரத்து, கோவா புராதன சின்னங்கள் பராமரிப்பு தொடர்பான மசோதாக்கள், தேசிய போதை மருந்துதடுப்பு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் (ஜன் விஸ்வாஸ்), ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மணிப்பூர் ஜிஎஸ்டி, சுரங்கம், கனிமங்கள் தொடர்பான திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு…

Read More

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் சிக்கலின்றி வெளியாகுமா என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது. ஜூலை 24-ம் தேதி பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பணிகள் முடிவடையாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 24-ம் தேதி படம் வெளியாவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு எதிராக இருவர் தெலங்கானா பிலிம் சேம்பரில் புகார் அளித்திருக்கிறார்கள். ‘ஆக்சிஜன்’ படத்துக்காக வாங்கிய ரூ.2.60 கோடி பணத்தினை வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும் என்று ஏசியன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. ‘முதுலா கொடுக்கு’ மற்றும் ‘பங்காரம்’ படங்களுக்காக ரூ.90 லட்சம் தர வேண்டும் என்று மகாலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இது தவிர்த்து பலரும் ஏ.எம்.ரத்னத்துக்கு வழங்கிய பணத்தை திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

Read More

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல் துறை. சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் வீடியோவை திருவள்ளூர் மாவட்ட போலீஸார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில் சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு திருவள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னையில் உள்ள அரசு…

Read More